tamilnadu

img

ஆண்டிமடம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு

ஆண்டிமடம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை  செய்து தராததை கண்டித்து கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு

அரியலூர், மே.1-  அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே, நாகம்பந்தல் கிராமத்தில், உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் ஆண்டிமடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மேரி தலைமையில் நடைபெற்றது.  இதில், மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றாதது கண்டித்து கிராம மக்கள், கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் அதிகாரிகள் அவசர அவசரமாக கிராம சபை கூட்டம் நடந்ததாக பொதுமக்களின் கையெழுத்துக்களை தாமே போட்டுக்கொண்டு புறப்பட்ட நிலையில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கிராம பொதுமக்கள் கூறும்போது, நாகம்பந்தல் கிராமத்தின் அடிப்படை வசதிகளான நாகபந்தல் கடலூர் மாவட்ட ஸ்ரீமுஷ்ணம் சாலை எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை சுமார் 360 மீட்டர் தூரமுள்ள சிதலமடைந்த கரடு முரடான சாலையை செப்பனிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தும், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  தங்களது கோரிக்கைகளை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காத பட்சத்தில். 2026-இல் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது, வீடுகளில் கருப்பு கொடி கட்டுவது, என மிகப்பெரிய அளவில் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானித்திருந்தனர்.  இந்நிலையில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கோரிக்கைகள் நிறைவேற்றிய பிறகு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.