புகழூர் காகித ஆலை வருடாந்திர மகாசபை கூட்டத்தில் மூத்த தொழிற்சங்க தலைவர் டி.கே. ரங்கராஜன் பங்கேற்பு
கரூர், மே 1- 41 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும், தொடர்ந்து எட்டாவது முறையாக அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் டிஎன்பிஎல் தொழிலாளர் சங்கத்தின் ஆண்டு மகா சபைக்கூட்டம் 30.4.25 அன்று சங்கத்தின் கௌரவ தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. அஞ்சலி தீர்மானத்தை ராஜேந்திரன் முன் மொழிந்தார். காதர்பாட்சா வரவேற்புரை நிகழ்த்தினார். வேலை அறிக்கையினை சங்க செயலாளர் மகேஷ் அவர்களும் வரவு செலவு அறிக்கையை பொருளாளர் வெற்றி செல்வன் முன் வைத்தனர். சங்கத் தேர்தலை பிரகாசன், வால்டர் கொண்ட குழு நடத்தியது. சங்கத்தின் கௌரவ ஆலோசகராக தோழர் டி.கே. ரங்கராஜன், கௌரவ தலைவராக ஜீவானந்தம், தலைவராக அரவிந்த், செயலாளராக மகேஷ், பொருளாளராக வெற்றிச் செல்வன் உள்ளிட்டோரும், 20 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்ய பட்டதாக அறிவிக்கப்பட்டது. சங்கத்தின் சார்பாக ஜீவானந்தம் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட குழுவின் செயல்பாட்டை பாராட்டி இந்த குழுவில் பணியாற்றிய ஓய்வு பெற்ற தோழர்கள் நடராஜன், ராஜேந்திரன், ராமசுப்பு, பூரணம், கிருஷ்ணன் ஆகியோருக்கும், இளைய தோழர்களுக்கு வழிவிட்டு தங்களது பொறுப்புகளில் இருந்து விடுவித்துக் கொண்ட முன்னாள் சங்க நிர்வாகிகள் ஆனந்த் ஐயப்பன், கெஜலெட்சுமி ஆகியோருக்கு மூத்த தலைவர் டி கே ரங்கராஜ் கைத்தறி ஆடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார். தொழிலாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாகவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சங்கத்தின் கவுரவ ஆலோசகர் டிகே ரங்கராஜன் உரை நிகழ்த்தினார். மே 20 அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி கரணமாகவும், உள்நாட்டு காகித ஆலைகளை பாதுகாக்க, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற காகிதத்திற்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்திட ஒன்றிய அரசை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சையது சம்ஷீர் நன்றி தெரிவித்தார். 300-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.