உடுமலை, மடத்துக்குளத்தில் சிஐடியு மே தின விழா
உடுமலை, மே 1- உடுமலை நகரம், உடுமலை ஒன்றியம், குடிமங்கலம் ஒன்றியம், மடத்துக்குளம் மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகள், சிஐடியு தொழிற்சங்கத்தின் சார் பில் கொடி யேற்றும் விழா நடை பெற்றது. பின்னர் உடுமலை நகரம், குடிமங்கலம் ஒன்றியம் மற்றும் மடத்துக்குளத்தில் தொழிலாளர் கள் அணிவகுப்புடன் பொது கூட் டம் நடைபெற்றது. உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை ராஜேந் திர சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலை நகரம், உடுமலை ஒன்றியம் மற்றும் மலைவாழ் மக்கள் கமிட்டியின் சார்பில் ஆயிரக்காணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட பேரணி உடுமலை நகரில் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதையடுத்து உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐடியு உடுமலை நகரச் செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். இந்த பொதுக் கூட்டத்தில் சிஐடியு திருப்பூர் மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ் சிறப்பு ரையாற்றினார். மேலும் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் செயலாளர் கோ.செல் வன், விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் அ.பஞ்ச லிங்கம், அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலை வட்டக்கிளை செயலா ளர் வெங்கிடுசாமி மற்றும் சிஐடியு சங்கத்தின் பாலதண்டபாணி, ஜோசப், ஈஸ்வரன், ஜஹாங்கீர் மற் றும் எல்லம்மாள் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். குடிமங்கலம் ஒன்றியம்: குடிமங்கலம் ஒன்றியத்தின் அனைத்து பகுதிகளிலும் காலை முதல் கொடியேற்றும் விழா நடை பெற்றது. நிறைவாக மாலையில் பெதப்பம்பட்டியில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐ டியு சங்கத்தின் தலைவர் ராஜகோ பால் தலைமை வகித்தார். தியாக வரலாறும் – தொழிலாளர் கடமை களும் என்ற தலைப்பில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டக்குழு உறுப்பினர் பி. ஆர்.கணேசன் சிறப்புரையாற்றி னார். இந்த கூட்டத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்.சசிகலா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்க வடிவேல், எம்.விஜயகுமார், ரங்கநாதன், மோகனசுந்தரம் மற் றும் ஓம்பிரகாஷ் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். மடத்துக்குளம்: மடத்துக்குளம் தாலுகா பகுதி யில் மார்க்சிஸ்ட் கட்சி கிளைகள் மற்றும் தொழிற் சங்கத்தின் சார்பில் காலை முதல் மாலை வரை கொடியேற்றும் விழா நடைபெற்றது. மடத்துக்குளம் நால்ரோடு பகுதி யில் மாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மடத்துக் குளம் தாலுகா செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் தலைமை வகித் தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பவித்ரா தேவி, சிஐ டியு சங்கத்தின் மடத்துக்குளம் செய லாளர் ஆர்.வி.வடிவேல் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் எம்.எம்.வீரப்பன், ராஜரத்தி னம், அரசு ஊழியர் சங்கத்தின் பாலு, குணசேகரன், ராமதுரை மற்றும் சிஐ டியு சங்கத்தின் ஈஸ்வரன், ராதா, மாசானம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். மலைவாழ் மக்கள் கமிட்டி மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மலைவாழ் மக்கள் குடியி ருப்பு பகுதிகளான திருமூர்த்தி மலை, குருமலை, ஈசல்திட்டு பகுதி களில் கொடியேற்று விழா நடை பெற்றது. பின்னர் மாலையில் உடு மலையில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் திரளானோர் கலந்து கொண் டனர்.