districts

img

விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாக சிபிஎம் ஆர்ப்பாட்டம்

விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குழுக்களின் சார்பில் கருமத்தம்பட்டி நால் ரோடு சந்திப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது, விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர், கூட்டத்தினர் திடீரென பேரணியாக மாறி உண்ணாவிரத பந்தலை நோக்கி கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.

முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பத்மநாபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2022-ல் போடப்பட்ட ஒப்பந்தப்படி, விசைத்தறியாளர்களின் கூலியை உயர்த்த ஜவுளித்துறை உற்பத்தியாளர்கள் முன்வர வேண்டும். அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்,” என வலியுறுத்தினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் தாலுகா செயலாளர் ஏ.சந்திரன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் காமராஜ், கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், திருப்பூர் மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி, கோவை சிஐடியூ மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர்கள்  சங்க மாநில தலைவர் அவிநாசி முத்துசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தெய்வேந்திரன், கனகராஜ், வி ஆர் பழனிச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெ.ரவீந்திரன், எஸ்.ஸ்டாலின் குமார், அன்னூர் மணிகண்டன்,  தாலுகா குழு உறுப்பினர்கள் கணியூர் கோபி, ரவிச்சந்திரன், பிரவீன், பாலகிருஷ்ணன், சோமனூர் கிளை செயலாளர் கோபால், கணியூர் கிளைச் செயலாளர் மாதவன்,  வாலிபர் சங்க நிர்வாகிகள் குருசாரதி, கோகுலக்கண்ணன், கௌதமன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் .