உதகை, பிப்.2- கோத்தகிரியில் முட்டைக்கோஸ் பயிரிட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வரு கின்றனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கூக்கல் தொரை, உயிலட்டி, கேர்கம்பை, நெடுகுளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலைக்காய்கறிகள் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்நி லையில், கடந்த சில மாதங் களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக தடுப்ப ணைகள், ஆறுகளில் விவ சாயத்திற்கு ஏற்றவாறு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மலைப் பயிர் காய்கறியான முட்டைக்கோஸ் அதிகள வில் பயிரிடப்படுகிறது. தற்போது மழையின் தாக்கம் குறைந்து பனிப்பொழிவு காணப்படு வதால், காலை மற்றும் மாலை நேரங்களில் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள முட்டைக் கோஸ் பயிர்களுக்கு விளைச்சலுக்கு ஏற்ற வாறு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இதனால், வரும் காலங்களில் அறுவடைக்கு ஏற்றவாறு முட் டைக்கோஸ் அதிக மகசூல் கொடுக்கும் என்பதால் மலைப்பயிர் விவசாயிகள் அதிகளவு முட்டைக்கோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.