districts

img

தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம்

தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் தருமபுரி, பிப்.2- அரூர் பேரூராட்சிக்குட் பட்ட தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற் றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சி, 8 ஆவது வார்டுக்குட்பட்ட ஆத்தோர வீதி, மக்கான் தெருவில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அரூர்  பேருந்து நிலையத்தையொட்டி அமைந்துள்ள இப்பகுதி யில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதிகள் மற்றும் சாலை  வசதிகள் இல்லை. கழிவுநீர் கால்வாய் அடைக்கப்பட்டுள்ள தால், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் அனைத்து கழிவுகளும், பொதுமக்கள் செல்லும் பொது பாதையில் தேங்கி நிற்கிறது. இதனால் கடுமையான துர் நாற்றம் வீசுவதால், அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள் ளாகி வருகின்றனர். இந்த கழிவுநீரைக் கடந்தே முதிய வர்கள், குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகி யோர் தினமும் சென்று வருகின்றனர். தங்களது வீட்டின் முன்  மனித கழிவோடு கழிவுநீர் தேங்கி நிற்பதால், தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. புதியதாக கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள், பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.