tamilnadu

img

தமிழ்நாட்டின் கல்வி முறையை சிதைக்க வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தேசிய கல்விக் கொள்கையால் தமிழ்நாட்டின் கல்வி முறையை சிதைக்க வேண்டாம் என ஒன்றிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

“தமிழ்நாட்டின் கல்விமுறை சிறப்பாக உள்ளது, தேசிய கல்விக் கொள்கை சீர்குலைக்கிறது; மாநில பாடத்திட்டத்தின் மூலம், பாடங்களை வெறும் மனப்பாடம் செய்யாமல், அடிப்படைகளை புரிந்துக் கொண்டு படிப்பதன் மூலம், தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இது தமிழ் மொழியைப் பற்றியது மட்டுமல்ல; பல தசாப்தங்களாக முயற்சிக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட ஒரு கல்வி முறையைப் பற்றியது.

தமிழ்நாட்டில் 1.09 கோடி மாணவர்கள் மாநில கல்வித் திட்டத்தில் பயில்கிறார்கள்; வெறும் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகளில் பயில்கின்றனர்.

மூன்றாவது மொழியை படிக்க அவசியம் இருந்தால் ஏன் இவ்வளவு பேர் மாநில பாடத்திட்டத்தை தேர்வு செய்துள்ளனர்? மக்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு அதற்கு மரியாதை கொடுப்போம்.

இத்தகைய சிறப்புவாய்ந்த கல்விமுறையை தேசிய கல்வி கொள்கை மூலம் சிதைக்க முயற்சிப்பது ஏன்?

மாணவர்களுக்கு எது சிறந்ததோ, அதில், தமிழ்நாடு ஒரு போதும் சமரசம் செய்யாது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.