நாமக்கல், பிப்.2- நாமக்கல்லில் 3 ஆம் ஆண்டு புத்த கத் திருவிழா சனியன்று துவங்கியது. 3 ஆம் ஆண்டு நாமக்கல் புத்தகத் திருவிழா, பரமத்தி சாலை, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் சனி யன்று துவங்கியது. இதன் துவக்க விழா விற்கு மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ் குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பி னர் பெ.ராமலிங்கம், மேயர் து.கலாநிதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராஜேஸ் கண்ணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் புத்த கத் திருவிழா அரங்கை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத் தார். இப்புத்தகத் திருவிழாவில் 80க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட் டுள்ளன. 20 ஆளுமைகளின் சொற் பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தை களுக்கான பொழுது போக்கு அம்சங் கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சி கள், போட்டிகள், அறிவியல் கோளரங் கம், பல்வேறு அரசு துறைகளின் பணி விளக்க அரங்குகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண் காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களு டன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிப்.10 ஆம் தேதி வரை தினசரி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பாட்டு போட்டி, மாறுவேடப் போட்டி, நாடகப்போட்டி, படம் பார்த்து கதை சொல்லுதல், வினாடி வினா, பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. மேலும், இந்த புத்தகத் திருவிழாவில் மருத்துவ முகாம், பல்வேறு அரசுத் துறை சார்ந்த அரங்குகள், உணவு அரங்குகள் ஆகியவை இடம் பெறவுள் ளன. தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங் கள் குறித்த புகைப்படக் கண்காட்சி அரங்கை அமைச்சர் மா.மதிவேந்தன் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ் வாதார இயக்கம் சார்பில் அமைக்கப் பட்டிருந்த மகளிர் சுய உதவிக்குழுவின ரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி அரங்கினை பார்வையிட் டார்.