போத்தனூர் ரயில் நிலையத்தை இரண்டாம் முனையமாக்க வலுக்கும் கோரிக்கை புனரமைப்புப் பணிகளும் மந்த நிலையில் நடப்பதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். சென்னை ராயபுரம், திருச்சியை தொடர்ந்து கோவை போத்தனூர் ரயில் நிலையம் தமிழகத்தில் துவங்கப்பட்ட 3 ஆவது ரயில் நிலையமாகும். பல் வேறு வரலாறுகளையும் உள்ளடக்கிய போத்தனூர் ரயில் நிலையம், கோவை ரயில் நிலையம் வருகைக்கு பின் களை யிழந்தது. போத்தனூர் ரயில் நிலையம் அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிக ளில் அதிகளவு கல்வி நிறுவனங்கள், சிட்கோ தொழிற்பேட்டை உள்ளிட்ட தொழிற்சாலைகள், பொள்ளாச்சி, பாலக் காடு பிரதான சாலைகள் உள்ளது. சுமார் 200 ஏக்கர் ரயில்வே இடம், ரயில்வே தொழிற்சாலைகள், குடியிருப்புகள் இருந்தாலும் கண்டுகொள்ளாமலேயே இருந்தது. அதே போல போத்தனூர் ரயில் நிலையத்தை இரண்டாவது முனையமாக மாற்ற வேண்டும் என தொடர்ந்து இப்பகுதி மக்கள், ரயில் பயணிகள், தொழில் நிறுவனங்கள் வலி யுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2023-24 ஆம் ஆண்டில் போத்தனூர் ரயில் நிலையம் என்.எஸ்.ஜி 4 ஆக ஒன்றிய அரசால் தரம் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக போத்தனூர் ரயில் நிலையம் இரண் டாம் முனையமாக மாற்றப்படும். பல் வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம் படுத்தப்படும் என மக்களிடையே எதிர் பார்ப்பு அதிகரித்தது. ஆனால், இது வரை அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் “அமித் பாரத்” திட்டத்தின் கீழ் ரூ. 25 கோடி மதிப்பீட்டில், போத்தனூர் ரயில் நிலையத்தில் மின் தூக்கிகள், நடைமேடை கூரைகள், வாகனம் நிறுத்துமிடம், குடியிருப்புகள் ஆகிய வற்றை மேற்கொள்ள ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஓராண்டில் பணிகள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் பணிகள் மந்த கதியில் நடை பெற்று வருகிறது. இதுகுறித்து பேசிய கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பு செயலாளர் லட் சுமி நாராயணன், போத்தனூர் ரயில் நிலையத்தில் அமித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த கடந்த ஆகஸ்ட் 2023 இல் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டது. 1.5 ஆண்டுகள் ஆகியும் பணி கள் நிறைவடையவில்லை. நடை மேடை கூரைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், கடந்த 2024 மார்ச் மாதம் கோவை வந்த ரயில்வே பொதுமேலாளர் போத்தனூர் ரயில் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக் கப்படும் எனத் தெரிவித்தார். இது வரை எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்த அறிவிப்புகள் விரைவில் வந்தால் கோவை தெற்குப் பகுதி விரிவடைய நன் றாக இருக்கும். போத்தனூரை சுற்றி பல் வேறு தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளது. மேலும், ரயில் வேக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலம் உள்ளது, என்றார். போத்தனூரை சேர்ந்த மோகன் என் பவர் கூறுகையில், கடந்த 1862 துவங் கப்பட்ட இந்த போத்தனூர் ரயில் நிலை யம் கடந்த 1956 வரை, தலைமை ரயில் நிலையமாக இருந்தது. இந்த புகழ் வாய்ந்த ரயில் நிலையத்தில் பாதி ரயில்கள் இங்கிருந்து இயக்க வேண் டும். அதே போல போத்தனூரில் இருந்து வந்தே பாரத் ரயிலை நாகர்கோயில், திருநெல்வேலி, எர்ணாகுளம், திரு வனந்தபுரத்திற்கு இயக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என் றார். சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையம் போல, போத்தனூர் ரயில் நிலையத்தை இரண்டாம் முனையாக மாற்ற வேண்டும். இதன் மூலம் அனைத்து ரயில்களும் ஒரே முனையத் திற்கு வருவதை தவிர்க்க முடியும், இதன் மூலம் கோவை மத்தியப் பகுதி யில் ரயில் நிலையம் அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும், மேலும், போத்தனூர் சுற்றுவட்டாரப் பகுதியில் வணிக ரீதி யாக பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி ஏற்படும் என்பது இப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. -கவி