states

நா.த.க.வேட்பாளர் உட்பட 51 பேர் மீது வழக்கு

ஈரோடு,பிப்.2- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி கட்சியினருடன் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயம் முன்பாக  வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.  விதிமுறைகளை மீறி வேட்பாளர் சீதாலட்சுமி தேவாலயத்திற்குள் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார். அப்போது அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள் வேட்பாளரை எச்சரித்து வெளியே அனுப்பினர். அப்போது அதே பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், தந்தை பெரியார் குறித்த  துண்டு  பிரசுரங்களை வழங்கினர். இவர்களை நா.த.கட்சியினர் தாக்கினர். இதனையடுத்து கிறிஸ்தவ தேவாலயம் முன்பு அனுமதி இன்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தாக, நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 51 பேர்  மீது தேர்தல்  பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், 6 பிரிவுகளின் கீழ் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.