நாகர்கோவில், பிப்., 02- தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டி னத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை யில் அவர் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியா ளருக்கு அளித்த பிரத்யேக நேர்காண லில், “நமக்கு உதவிட மறுத்த வெளிநாடு கள் இன்று நம் சாதனைகளை பார்த்து வியக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் மையத்தை அமைக்கும் பணிகள் அனைத்து நடைபெர்று வருகின்றன. இன்னும் 2 ஆண்டில் அங்கிருந்து ராக்கெட்டுகள் விண்ணில் பாயும்” என அவர் கூறினார்.