மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளுடன் பாஜக பிரமுகர் கைது
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கஞ்சா மற்றும் எம்டி எம்ஏ போதைப் பொருளை வைத்திருந்த பாஜகவின் தீவிர ஊழியர் உள்ளிட்ட இருவரை அம்மாநில கலால் அதிகாரிகள் ஞாயிறன்று கைது செய்தனர். ஆலப்புழா மாவட்டம் பனவள்ளி மேற்கு புதுவீட்டைச் சேர்ந்த அஜ்மல் (23), துரவூர் நெடும்சிராவைச் சேர்ந்த ரதீஷ் (42) ஆகிய இருவரையும் குத்தி யத்தோடு கலால் காவல்துறையினர் கைது செய்தனர். அஜ்மலிடமிருந்து 50 கிராம் கஞ்சாவும், ரத்தீஷிடமிருந்து 80 கிராம் கஞ்சாவும், 7 மில்லிலிட்டர் மெத்தம்பேட்டமைனும் (எம்டிஎம்ஏ) பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரத்தீஷ் துறவூர் வாலமங்கலத்தைச் சேர்ந்த தீவிர பாஜக ஊழியர். சேர்த்தலா நீதிமன்றம் இருவரையும் சிறையில் அடைத்தது.