states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நவம்பர் 1 அன்று அரசு பொதுவிடுமுறை அறிவிப்பு

சென்னை, அக்.19- தீபாவளி பண்டிகை அக். 31 (வியாழக்கிழமை) அன்று  கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதற்கு அடுத்த  நாளான நவம்பர் 1-ஆம் தேதியும்பொ துவிடுமுறை அறி வித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக பல  மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவும் செய்வர். இந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், மறு நாள் நவம்பர் 1 அன்று  அவர்கள் மறுபடியும் பணிகளுக்கு திரும்பியாக வேண்டும்  என்ற நிலை இருந்தது. இதனால் நவம்பர் 1 அன்றும் விடு முறை வழங்கினால் நவம்பர் 2, 3 ஆகிய விடுமுறை நாட்க ளையும் பயன்படுத்தி கொள்ள முடியும் என்று கோரிக்கை கள் எழுந்தன. இதையேற்று பண்டிகைக்காக வெளியூர்  செல்லும் மக்கள் அவசர அவசரமாக ஊர் திரும்ப வேண்டிய  சிரமத்தை தவிர்ப்பதற்காக தமிழக அரசு நவம்பர் 1 அன்று  விடுமுறை அறிவித்துள்ளது. இதனை ஈடுகட்ட நவம்பர்  9-ஆம் தேதிவேலை நாளாக இருக்கும் எனவும் கூறியுள்  ளது. இதனால் தீபாவளியையொட்டி வியாழன், வெள்ளி,  சனி, ஞாயிறு என மொத்தம் 4 நாட்கள் தொடர்விடுமுறை கிடைக்க உள்ளது.

ரூ.10,903 கோடி சுவாஹா: நன்கொடைக்காக அடிமாட்டு விலைக்கு  ஒப்பந்தங்கள் வாரி இறைப்பு மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு தாராளம்

மும்பை மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா (ஷிண்டே) - தேசியவாத காங்கி ரஸ் (அஜித்) ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த பாஜக கூட்டணி ஆட்சி மீது நாள்தோறும் பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்து வருகிறது.  இந்நிலையில், நன்கொடைக்காக மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு அடிமாட்டு விலைக்கு நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலை ஒப்பந்தங்களை வாரி இறைத்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”தேர்தல் பத்திர நன்கொடை மற்றும் இதர நன்கொடைக் காக மகாராஷ்டிரா மகாயுதி அரசாங்கம் (பாஜக கூட்டணி அரசு) மாநில சாலைப் போக்குவரத்து உள்கட்டமைப்பு ஒப்பந் தங்களில் சலுகை அளித்துள்ளது. அதா வது நன்கொடைக்காக மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் (எம் எஸ்ஆர்டிசி) குறிப்பிட்ட சில நிறுவனங்க ளுக்கு மட்டுமே ஒப்பந்தங்களை வழங்கி யுள்ளது. அதன்படி எம்எஸ்ஆர்டிசி வழங் கிய 8 திட்டங்களின் ஒப்பந்த மதிப்பு ரூ.20,990 கோடி ஆகும். ஆனால் வெறும் ரூ.10,087 கோடி அளவில் மட்டுமே ஒப்பந்த மதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத னால் அரசுக்கு ரூ.10,903 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து பிரதமர் மோடி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய சாலைப்போக்கு வரத்து அமைச்சர் நிதின் கட்காரி ஆகி யோர் இது குறித்து பதிலளிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை, அக்.19-  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது:- மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசை யில் நகர்ந்து 2 நாளில் ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். வங்கக் கடலில் 22 ஆம் தேதி உரு வாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 24  ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுவடையும்.  இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று, நாளை, நாளை மறுநாள் மற்றும் அக்டோபர் 24 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்க ணக்கான பைபர் படகுகள் துறைமுகத் தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

4,430 போலி தொலைபேசி எண்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி

சென்னை, அக்.19- தமிழகம் முழுவதும் கடந்த 9 மாதங்களில் சைபர் குற்றவாளிகள் 4,430 போலி தொலைபேசி எண்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து மோசடி களை தடுக்க தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிக ளுடன் சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல்  ஆலோ சனை நடத்தினார். தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை அதாவது 9 மாத கால ங்களில் சைபர் குற்றவாளி கள் தங்களது மோசடிகளு க்கு 4,430 தொலைபேசி எண் களை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் பறித்துள்ள சம்பவம் தற்போது தேசிய சைபர் க்ரைம் மூலம் வெளி யாகி உள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள மாநில சைபர் க்ரைம் தலைமை அலுவல கத்தில் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் தலைமையில் தொலைதொடர்பு துறை துணை இயக்குநர் சுதா கர் மற்றும் பிஎஸ்என்எல், தனியார் தொலைத்தொடர்பு துறை நிறுவனமான ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் மண்டல அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பொது மக்கள் தொடர்பு கொள்வ தற்கு முன்பே சைபர் குற்ற வாளிகளை இடைமறித்து தடுக்க செய்யப்பட வேண் டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும், பெரும்பாலான போலி அழைப்புகள் வாட்ஸ்அப்,  ஸ்பைக், டெலிகிராம் போன் றவை மூலம் தொடர்பு கொள் ளும் மோசடி நபர்களை இடை மறித்து தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் விரி வாக அதிகாரிகளுடன்ஆலோ சனை நடத்தப்பட்டது.

ஆளுநருக்கு  அஞ்சல் அட்டை அனுப்பி போராட்டம்

சென்னை,அக்.19-  ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற டி.டி தமிழ் இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சி யில், தமிழ்த்தாய் வாழ்த்திலி ருந்து திராவிடநல் திருநாடு எனும் வரியை நீக்கி பாடப் பட்டதை கண்டித்து சென்னை ராயப்பேட்டை யில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆயிரம் அஞ்சல் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதுமி ருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி க்கு 20 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போ ராட்டம்  நடைபெறுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் அவமதிப்பு: ஆளுநருக்கு சிபிஐ,மதிமுக கண்டனம்

சென்னை,அக்.19-   சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் அக்டோபர் 18 அன்று நடை பெற்ற  ‘இந்தி தினவிழா’வில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் “தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரி தவிர்த்து பாடியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மதிமுக ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆளுநர் முன்னிலையில் நடந்த தவறை, பாடலை துல்லியமாக, பக்தி சிரத்தையுடன் பாடும் ஆளுநர் ஏன் சுட்டிக்காட்டி, அதனை  திருத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை. தவறை திருத்தி சரியாக மீண்டும் ஒரு முறை பாடச் சொல்லியிருந்தால் அவரது  ‘நேர்மையை’ உணர முடியும். அரசியல மைப்புச் சட்டம் வழங்கியுள்ள தகுதியான பொறுப்பில் இருக்கும் ஆளுநர், அதற்கு முற்றிலும் பொருத்தமற்ற முறையில் பேசு வதையும், செயல்படுவதையும் வழக்க மாகக் கொண்டுள்ளார். இந்த எதிர்மறை அணுகுமுறையை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்திய தேசிய கீதத்தில் இருக்கக்கூடிய திராவிட உத்கல வங்கா என்பதில் உள்ள திராவி டத்தை எடுக்கச் சொல்வீர்களா? ஒருவேளை அதற்கு இதில் ஒத்திகை பார்க்கின்றீர்களா? நீங்கள் இந்த வார்த்தைகளை அகற்றச் சொன்னதற்கு மன்னிப்பே கிடையாது. இருந்தாலும் நீங்கள் பகிரங்கமாக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆளுநரை உடனே தில்லிக்கு அழைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து மாநில அளவில் தொடர் போராட்டம்

வருவாய்துறை அலுவலர் சங்கம்  அறிவிப்பு

திருநெல்வேலி, அக்.19- வருவாய்துறை அலுவலர்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி நெல்லை மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து மாநில அளவில் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் முரு கையன் நெல்லையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “திரு நெல்வேலி மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு எதி ராக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே மாவட்ட ஆட்சித் தலைவரை  கண்டித்து மூன்று கட்ட போராட்டங்களை நடத்தி னோம். ஆனால், இதுவரை தமிழக அரசு  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அக்.25 அன்று தமிழக முழுவதும் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பாக, ‘இந்த  மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும்’ என  வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம். இதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அக்.29 அன்று   தமிழகத்தில் உள்ள அனைத்து வருவாய்  துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து எங்கள்  எதிர்ப்பை பதிவு செய்வோம். அதற்கும்  தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை  என்றால் அடுத்த கட்டமாக நவம்பர் 26 ஆம் தேதி தொடர் பணி புறக்கணிப்பு போ ராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும் அந்தந்த அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபடுவோம்.  இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் தலைமை செயலாளர் வருவாய் துறை  செயலாளர் ஆகியோரிடம் பலமுறை புகார் கொடுத்தும் அவர்கள் இதுவரை  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  தொடர்ந்து இதே நிலைமை நீடித்தால் அடுத்த கட்டமாக இந்த போராட்டம் தீவிரப் படுத்தப்படும், தமிழகத்தில் கருணை அடிப்படை பணிகளை நியமனம் செய்வ தற்கு உச்சவரம்பாக ஐந்து சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை ரத்து செய்து மீண்டும். 25 சதவிகிதமாக உயர்த்தி தர வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். தேர்தல் நேரத்தில் திமுக  அளித்த  வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என அறிவித்துவிட்டு தற்போது வரை அது  தொடர்பாக எந்தவித நடவடிக்கை எடுக்க வில்லை. தொடர்ந்து நாங்கள் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகிறோம். இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ  தொடர்ந்து நடத்தும்  போ ராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார். முன்னதாக, நெல்லையில் தமிழ்நாடு  வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு  கூட்டம் நடைபெற்றது.