ஜார்க்கண்ட், வயநாட்டில் இன்று வாக்குப்பதிவு
ராஞ்சி, நவ. 12 - ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை (நவ.13) நடை பெறுகிறது. மொத்தம் 81 உறுப்பி னர்களை கொண்ட ஜார்க் கண்ட் சட்டமன்றத்துக்கு நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங் களாக தேர்தல் அறிவிக்கப் பட்டது. இதில், முதற்கட்ட மாக தேர்தல் நடைபெறும் 43 தொகுதிகளில் திங்கட் கிழமை மாலையுடன் பிரச்சா ரம் ஓய்ந்தது. அதைத்தொடர் ந்து, புதனன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வயநாடு : கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கும் புதனன்று இடைத்தேர்தல் நடைபெறு கிறது.
மீண்டும் ஜப்பான் பிரதமரானார் இஷிபா
டோக்கியோ, நவ. 12 - ஜப்பானில் பிரதமராக இருந்த பியூமோ கிஷிடா விற்கு எதிராக ஊழல் குற்றச் சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அவர் தனது பத வியை ராஜினாமா செய்தார். ஆளும் லிபரல் டெ மாக்ரடிக் கட்சி சார்பில் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சரான ஷீகெரு இஷிபா கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். கடந்த அக்டோபர் 1 அன்று பிரதமராகவும் அவர் பதவியேற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து, அக்டோபர் 27 அன்று நடை பெற்ற தேர்தலில் இஷிபா வின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியும், கொமெய்டோ கட்சியும் கூட்டணி அமைத்து போட்டி யிட்டன. இதில், 465 இடங்களை கொண்ட கீழவையில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கூட்டணியால் பெரும் பான்மை பெறமுடிய வில்லை. எனினும், நாடாளு மன்ற சிறப்பு கூட்டத்தொட ரில் நடந்த வாக்கெடுப்பில் 221-160 என்ற வாக்கு வித்தி யாசத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யோஷிஹிகோ வை, இஷிபா வீழ்த்தி மீண்டும் பிரதமராக தேர்வாகி யுள்ளார்.
மணிப்பூரில் ஊரடங்கு!
இம்பால், நவ. 12 - மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்ட த்தில், குக்கி பழங்குடியைச் சேர்ந்த 11 பேர், சிஆர்பிஎப் படை யினரால் திங்களன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர், ஆபத்தான நிலையில் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்த ரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள் ளன. மேலும், 11 பேர் மீதான என்கவுண்ட்டர் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்த குக்கி - ஜோ பழங்குடி கவுன்சில், செவ்வா யன்று காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தி ருந்தது. இதன் காரணமாக, கடைகள் அடைக்கப்பட்டு மாநிலத்தின் பல பகுதிகளிலும் சாலைகள் வெறிச்சோடிக் காணப் பட்டன.
சிஆர்பிஎப் மீண்டும் தாக்குதல் மணிப்பூரில் 2 பேர் பலி; 6 பேரை காணவில்லை
சிஆர்பிஎப் மீண்டும் தாக்குதல் மணிப்பூரில் 2 பேர் பலி; 6 பேரை காணவில்லை மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் தீவிர மடைந்து வருகின்றன. ஞாயி றன்று ஜிரிபாம் மாவட்டத்தில் குக்கி பழங்குடியினர் மீது சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய தாக்குதலில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து திங்களன்று ஜிரிபாம் மாவட்டத்தின் போரோபகாரா பிரிவில் உள்ள ஜகுராடோரில் சிஆர்பி எப் நிகழ்த்திய தாக்குதலில் 13 பேர் காணாமல் போயினர். அவர்களில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 5 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் 6 பேரை காணவில்லை என தகவல் வெளி யாகியுள்ளது. காணாமல் போன மற்றும் பலியானவர்கள் அனைவரும் குக்கி பழங்குடியினர்கள் ஆவர். எங்களது சோ தனை சாவடியில் தாக்குதல் நடத்தியதால் குக்கி பழங்குடியின மக்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினோம் என சிஆர்பிஎப் கூறியுள்ளது.
தமிழக மீனவர்கள் 11 பேருக்கு இரண்டு ஆண்டு சிறை
அறந்தாங்கி, நவ.12- புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடந்த அக்டோபர் 28ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக்கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு செவ்வாய்க்கிழமையன்று ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, 15 மீனவர்களில் 11 பேர் இரண்டாவது முறையாக இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படுவதால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார் . மேலும் நான்கு மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தார். இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட நான்கு மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கொடைக்கானல் மலையில் நீண்ட வாகனங்களுக்கு தடை
திண்டுக்கல்,நவ.12- 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள்) கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப்புள்ளியை தாண்டிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில போக்குவரத்து அதிகாரியின் இசைவுடன் பொதுநலன் கருதியும் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள்) திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப்புள்ளியை தாண்டிச் செல்ல தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. இந்த அறிவிப்பு 18.11.2024 அன்று முதல் அமலுக்கு வருகிறது, என்று திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
முதுநிலை ஆசிரியர் தேர்வு பாடத்திட்டம்: அரசிதழில் வெளியீடு
சென்னை, நவ.12- தமிழ்நாட்டில் முதுகலை ஆசிரியர் தேர்வை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், முதுநிலை ஆசிரியர் உட்பட பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுக்குரிய புதிய பாடத்திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிறப்பித்துள்ளார். இந்த புதிய பாடத் திட்டத்தின்படி அடுத்த தேர்வு நடைபெறும் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
மதுரை,நவ.12- தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி மீது அளிக்க ப்பட்ட புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் 4 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மதுரை திருநகர் போலீ சார் பதிவு செய்துள்ள வழக்கில் தனக்கு முன்ஜா மீன் கோரி நடிகை கஸ்தூரி, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு செய்துள் ளார். இந்த மனு மீதான விசா ரணையில் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் கூறு கையில், தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து, இது போன்ற வெறுப்பு பேச்சு வன்மையாக கண்டிக்கத் தக்கது; இதுபோன்ற வெறுப்பு பேச்சு ஏன்? தெலுங் கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்த வர்கள் கிடையாது; தமிழ்நாட் டின் ஒரு பகுதியினர்தான். நீங்கள் மன்னிப்புக் கேட்ட தாக தெரியவில்லை; பேசி யதை நியாயப்படுத்துவது போல் உள்ளது என்று கூறி கண்டித்தார்.
இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்து தெரிவித்தவருக்கு 5 ஆண்டு சிறை
சென்னை,நவ.12- இந்தியாவின் இறை யாண்மைக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சர வணகுமார் என்ற அப்துல்லா விற்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மதுரையை சேர்ந்த இவர் மீது கடந்த 2021ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின் இந்த வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இவ்வழக்கு பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இளவழ கன், சரவணகுமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை யும், 10 ஆயிரம் ரூபாய் அப ராதமும் விதித்தார். இதையடுத்து தேசிய புலனாய்வு சிறப்பு பிரிவு காவல்துறையினர், சர வணக்குமாரை பலத்த பாது காப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
11 கோவில்களில் பெண் ஓதுவார்கள்
சென்னை, நவ. 12 - தமிழ்நாட்டில் 11 கோயில் களில் பெண் ஓதுவார்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ள னர் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். “அனைத்துச் சாதியின ரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின்படி 29 பேர் அர்ச்சகராக உள்ளனர். அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி பள்ளிகள் முடங்கியிருந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு புத்துயிர் பெற்றது” என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.