states

img

மன்னிப்பு கோரிய கங்கனா ரணாவத் - ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட மூதாட்டி ஒருவரை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக எம்.பி கங்கனா ரணாவத், நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார். 
புதிய வேளாண் கொள்கைகளை எதிர்த்து 2020-21 ஆம் ஆண்டில் தில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட மஹிந்தர் கவுர் என்ற மூதாட்டி, 100 ரூபாய்க்காக விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டதாக, கங்கனா ரணாவத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை எதிர்த்து மஹிந்தர் கவுர், பஞ்சாப் மாவட்ட நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கங்கனா ரனாவத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக பஞ்சாப் நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் நேற்று (27-10-25) ஆஜரானார். இந்த விசாரணையின் போது, மஹிந்தர் கவுரிடம் பாஜக எம்.பி கங்கனா ரணாவத் மன்னிப்பு கோரினார். 
இதனை தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அவதூறு வழக்கில் கங்கனாவுக்கு ஜாமீன் வழங்கி பதிண்டா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.