இம்பால் மணிப்பூர் மாநிலத்தின் ஜிரி பாம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் குக்கி பழங்குடியி னத்தைச் சேர்ந்த 11 பேரை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன் றனர். மேலும் காணாமல் போன மெய்டெய் பிரிவைச் சேர்ந்த 6 பேர் கொடூர காயங்களுடன் சட லமாக மீட்கப்பட்டனர். இந்த 2 சம்பவங்கள் மற்றும் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் அமலால் மணிப்பூ ரில் மீண்டும் வன்முறை சம்ப வங்கள் தலைதூக்கியது. இதனால் ஆளுங்கட்சி கூட்ட ணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் பாஜக அரசின் ஆத ரவை என்பிபி கட்சி வாபஸ் பெற் றது. அதே போல முதல்வர் பிரேன் சிங்கை மாற்ற பாஜக எம்எல்ஏக் களும் மோடி அரசுக்கு எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஆட்சி கவிழும் சூழலல் ஏற்பட்டுள் ளது. இந்நிலையில், மணிப்பூரில் ஆட்சியை காப்பாற்ற ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூடு தல் படையை குவித்து, வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிடுவ தாக, கண்துடைப்பு அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து தாக்குதல் சம்ப வங்கள், வன்முறையை தூண்டும் செயல்கள் தொடர்பாக மெய் டெய் தீவிரவாத அமைப்பான “அரம்பை தெங்கோலின்” அமைப் பின் தலைவரான குரோவு குமா னிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருகின்றனர். மெய்டெய் பிரி வைச் சேர்ந்த 6 பேர் கொடூர காயங்களுடன் உயிரிழந்தது மற்றும் ஜிரிபாம் மாவட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்டது தொடர்பாகவும் குரோவு குமானி டம் என்ஐஏ அதிகாரகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வரு கின்றனர். இவர் ஆர்எஸ்எஸ் ஆத ரவு பெற்ற நபர் என்பதும் கவ னிக்கத்தக்கது.
ராணுவத்திற்கு எதிராக பெண்கள் போராட்டம்
நவம்பர் 25ஆம் தேதி அன்று இம்பாலின் மேற்கு மாவட்டத்தில் உள்ள லாய் டாங் குனோவ் கிராமத்தைச் சேர்ந்த லைஷ்ராம் கமல்பாபு சிங் (57) என்பவர் சிஆர்பிஎப் ராணுவ முகாமில் இருந்து காணாமல் போனார். கமல் பாபு மெய் டெய் பிரிவைச் சேர்ந்தவர் என்ற நிலை யில், இம்பால், இம்பால் மேற்கு, காங் கோக்பி ஆகிய மாவட்டங்களில் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக கமல்பாபு சிங் காணாமல் போன நாளில் இருந்து மெய்டெய் பிரிவைச் சேர்ந்த பெண்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணுவ முகாமுக்கு செல் லும் பாதையை பெண்கள் மறித்துள்ள னர். இதனால லேமாகாங் பகுதியில் உள்ள ராணுவ முகாம் சிறைச்சாலைப் போல தனிப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.
ராணுவத்திற்கும், மெய்டெய் பிரிவுக்கும் மோதல் வாய்ப்பு
கமல்பாபு சிங் காணாமல் போகி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் இன்று வரை அவர் எங்கே இருக்கிறார் என எவ் வித தகவலும் வெளியாகவில்லை. கமல் பாபு சிங்கை சிஆர்பிஎப் ராணுவ வீரர் கள் கொலை செய்து இருக்கலாம் எனக் கூறி மெய்டெய் பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வன்முறையை மாற வாய்ப்புள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. அதா வது சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் மெய் டெய் பிரிவினர் தாக்குதல் நடத்த திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளிவருகிறது.