நாகர்கோவில், டிச. 1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக ஆர்.செல்லசுவாமி தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கன்னியா குமரி மாவட்ட 24 ஆவது மாநாடு நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் நாகர் கோவில் வெட்டூர்ணிமடத் தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.அண்ணாதுரை, ஜஸ்டின், மிக்கேல் நாயகி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறு ப்பினர் கே.ஜி.பாஸ்கரன் வாழ்த்திப் பேசினார். நிறைவு செய்து மாநில செயற் குழு உறுப்பினர் கே.கனக ராஜ் பேசினார்.
புதிய மாவட்டக்குழுதேர்வு
45 பேர் கொண்ட மாவட்டக் குழுவும், 14 பேர் கொண்ட மாவட்ட செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டன. மாவட்ட செயலாளராக ஆர். செல்லசுவாமி தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் களாக ஆர்.லீமாறோஸ், எம்.அண்ணாதுரை, எம்.அகமது உசைன், என்.எஸ். கண்ணன், என்.உஷாபாசி, எஸ்.ஆர்.சேகர், எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், பி.விஜய மோகனன், எஸ்.அந்தோணி, வி.அனந்தசேகர், என்.ரெஜீஸ்குமார், ஆர்.ரவி, ஏ.நீலாம்பரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைக்கும் அரியவகை மணல், ரப்பர், தும்பு, மலர் வகைகள், கிழங்குகள், பழ வகைகள், ஏராளமாக கிடைக்கும் மீன் ஆகியவைகளை பயன் படுத்தி, மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை உரு வாக்க வேண்டும். பொருத்த மான இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் கூடுதலாக அமைக்கப்படவேண்டும். அறிவியல் மையம், ஐடி பார்க் உட்பட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு பார்வதிபுரம் அரு கில் ஆக்கிரமிப்பில் உள்ள ‘ஆராச்சர்’ நிலப்பகுதியை அரசு கையகப்படுத்தி பயன் படுத்த முன்வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.