states

img

மகாராஷ்டிரா-ஜார்க்கண்ட் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இரு மாநில தேர்தல்கள் - சா.பீட்டர் அல்போன்ஸ்

இரு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மாநில எல்லைகளைத் தாண்டி தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. மகாராஷ்டிராவில் பாஜக  கூட்டணி எதிர்பாராத பெரும் வெற்றியும், ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி குறிப்பிடத் தக்க வெற்றியும் பெற்றுள்ளன. சில மாதங் களுக்கு முன் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்த லில் மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இடங் களில் வெற்றி பெற்ற காங்கிரசும் இந்தியா கூட்டணியும் இவ்வளவு மோசமாக தோற்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் தனித்துவம்

இந்தியாவின் பொருளாதார தலைநகராக விளங்கும் மும்பையை கொண்ட மகா ராஷ்டிரா, தொழில் வளர்ச்சியிலும் வணிக செயல் பாடுகளிலும் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.  இதனால் இம்மாநில தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் அதிக கவனம் பெற்றன. நாக்பூரை  தலைமையிடமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தனது நூற்றாண்டு விழாவை கொண் டாடும் வேளையில், மாநிலத்தில் தங்களது கொள்கைகளை ஆதரிக்கும் ஆட்சி அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அரசியல் கட்சிகளின் கணக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவையும், மோடியின் செல் வாக்கில் ஏற்பட்ட சரிவையும் மீட்டெடுக்க இத் தேர்தல் அவசியமாக இருந்தது. ஹரியானா தேர்தல் தோல்விக்குப் பின் சோர்வுற்றிருந்த காங்கிரசுக்கும், இந்தியா கூட்டணிக்கும் புத்துணர்ச்சி தேவைப்பட்டது. சரத் பவார்,  உத்தவ் தாக்கரே போன்ற மூத்த தலைவர்களின்  அரசியல் எதிர்காலமும் இத்தேர்தலில் தீர்மானிக் கப்பட்டது. கூட்டணி அரசியலின் சிக்கல்கள் பெரும் ஊழல்பேர்வழி எனக் குற்றம்சாட்டப் பட்ட அஜித் பவாரை துணை முதல்வராக்கியது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அதிருப்திக்கு கார ணமாயிற்று. இதனால் நாடாளுமன்றத் தேர்த லில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய  ‘மறுத்த’ ஆர்.எஸ்.எஸ், தற்போது தேவேந்திர பட்னாவிஸின் வேண்டுகோளுக்கு இணங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச செயல்பாடுகள் கடந்த காலங்களில் மறைமுகமாக பாஜக வுக்கு அனுசரணையாக இருந்த தேர்தல் ஆணையம், தற்போது வெளிப்படையாகவே செயல்பட்டது. ஹரியானா தேர்தலுடன் சேர்த்து  நடத்தப்பட வேண்டிய தேர்தல் காலம் தள்ளி வைக்கப்பட்டது. மூன்று கோடி பெண்களுக் கான மாதாந்திர நிதி உதவித் திட்டத்தின் தாக்கத்தை உறுதிப்படுத்த இந்த கால அவ காசம் பயன்படுத்தப்பட்டது.

கட்சி சின்னங்கள் விவகாரம்

சரத் பவார் கட்சி மற்றும் உத்தவ் தாக்கரே  கட்சிகளின் சின்னங்களை, ஒருதலைப்பட்சமாக அஜித் பவார் மற்றும் ஷிண்டே அணிகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது. உச்சநீதி மன்றத்தின் உத்தரவும் வியப்பூட்டும் வகையில்  அமைந்தது. சரத் பவாரின் கடந்த தேர்தல் புகைப் படங்களை அஜித் பவார் அணி தவறாக பயன் படுத்தியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் சாசன நிறுவனங்களின் தவறான நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், மாநில ஆளுநர், சட்டமன்ற சபாநாயகர் ஆகிய  அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து உத்தவ் தாக்கரே, சரத் பவார் அணிகளை பல வீனப்படுத்தின. கட்சி மாறிய உறுப்பினர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததும், உச்ச நீதிமன்றம் இதனை கண்டிக்காததும் ஜன நாயகத்தின் மீதான நம்பிக்கையை குறைத்தது.

மத அடிப்படையிலான பிரச்சாரம்

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் 80,000 சிறு கூட்டங்கள் மூலம் இந்து வாக்காளர்களை சந்தித்தது. இஸ்லாமிய எதிர்ப்பு என்ற ஒற்றை  அடிப்படையில் வாக்குகளைத் திரட்ட முயன்ற னர். மோடி, அமித்ஷா, ஆதித்யநாத் போன்றோர்  வெளிப்படையாகவே மத அடிப்படையிலான பிரிவினை பேச்சுக்களை பேசினர். பள்ளி வாசல்களில் நடந்த எதிர்ப்பு பிரச்சாரங்களை “வோட் ஜிகாத்” என சித்தரித்து பெரும் பான்மை வாக்குகளை திரட்டினர். எதிர்க்கட்சிகளின் தவறுகள் இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளரை  அறிவிக்கவில்லை. 21 இடங்களில் ஒருமித்த வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை. உழவர்-உழைப்பாளர் கட்சி, சமாஜ்வாதி, இடது சாரிகள், பிரகாஷ் அம்பேத்கர், ஓவைசி ஆகி யோருக்கு போதிய இடங்கள் வழங்கப்படாத தால் தலித், சிறுபான்மை வாக்குகள் சிதறின.

 ஜார்க்கண்டின் வித்தியாசமான பாதை

பின்தங்கிய, பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ஜார்க்கண்டில் இந்துத்துவ, இஸ்லா மிய வெறுப்பு பிரச்சாரங்கள் பலனளிக்க வில்லை. முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை எவ்வித முகாந்திரமும் இன்றி வருவாய்  புலனாய்வுத் துறை மூலம் கைது செய்து சிறை யில் அடைத்தனர். முதல்வர் அலுவலக அதிகாரி கள் வீடுகளில் ரெய்டு நடத்தி பீதியை ஏற்படுத்தி னர். ஆனால் இவை எதுவும் மக்களை திசை திருப்பவில்லை. சிறையிலிருந்த ஹேமந்த் சோரன் நம்பிக்கை யுடன் நியமித்த ஜெய்ராம் மாத்தோவை இழுத்து பாஜகவில் சேர்த்து பழங்குடி வாக்கு களைப் பிளக்க முயன்ற உத்தியும் தோல்விய டைந்தது. சோரனின் மனைவி கல்பனா சோரன்  வீராங்கனையாக எழுந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியின் வாக்கு வங்கியை பாதுகாத்தார். 29 பழங்குடி தொகு திகளில் 28 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றியது சாதனையாக அமைந்தது. மின்னணு வாக்குப்பதிவு சர்ச்சைகள் நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கி, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா தேர்தல்கள் வரை பல முரண்பாடுகள் கண்டறியப் பட்டுள்ளன. ஹரியானாவில் பதிவான வாக்கு களுக்கும், அறிவிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் 6.71% (13 லட்சம் வாக்குகள்) வித்தியாசம் காணப்பட்டது. சில மாவட்டங்களில் இது 10% ஆக உயர்ந்தது. குறைந்த வித்தியாசத்தில் பாஜக வென்ற தொகுதிகளில் கடைசி அரை மணி நேரத்தில் 10% வாக்குகள் அதிகரித்தது வியப்பை ஏற்படுத்தியது.

தொழில்நுட்ப சர்ச்சைகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் ‘source code’ ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டி லேயே உள்ளது. பிஇஎல் (B.E.L) மற்றும் இசிஐஎல் (E.C.I.L) நிறுவனங்கள் பாஜக சார்பு இயக்குநர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. தொழில்நுட்ப வல்லுநர்கள், குறிப்பாக எலான்  மஸ்க் போன்றோர் இந்த இயந்திரங்களின் பாது காப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். எதிர்கால சவால்கள் மகாராஷ்டிராவில் அறிவிக்கப்பட்டது போன்ற  1. பெண்களுக்கான நிதி உதவித் திட்டங்கள்  மாநிலங்களின் நிதிநிலையை சீர்குலைக்கும் அபாயம் உள்ளது. 2. மாநிலங்கள் வரி விதிக்கும் அதி காரங்கள் குறைந்து, ஒன்றிய அரசை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். 3. தேர்தல் முறைகள் மீதான நம்பிக்கை குறையும். 4. அரசியல் சாசன நிறுவனங்களின் நடு நிலைமை மேலும் கேள்விக்குறியாகும் - என்ற சவால்களை, இத்தேர்தல்கள், குறிப்பாக , மகா ராஷ்டிரா தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தல்கள் காட்டும் முக்கிய பாடங்கள்  என்னவெனில்: பெண் வாக்காளர்கள் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மாறியுள்ளனர் மத அடிப்படையிலான அரசியல் எல்லா இடங்களிலும் வெற்றி பெறாது தேர்தல் முறைகளின் வெளிப்படைத் தன்மை அவசியம் ஜனநாயக நிறுவனங்களின் நடுநிலைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். தேர்தல் முறைகள் மீதான நம்பகத்தன்மை குறைந்தால், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகும். இனி வரும்  தேர்தல்களில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை இந்திய வாக்காளர்கள் முடிவு செய் வார்களா அல்லது ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள நிறுவனங்கள் முடிவு செய்யுமா  என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.