districts

img

சிபிஎம் ஈரோடு மாவட்டச் செயலாளராக ஆர்.ரகுராமன் தேர்வு

ஈரோடு, டிச.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளராக ஆர்.ரகு ராமன் தேர்வு செய்யப் பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட 13 ஆவது மாநாடு அந்தியூரில் நவம்பர் 30 மற்றும்டிசம்பர் 1 ஆகிய தேதி களில் நடைபெற்றது. 

மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனி சாமி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி.சுந்தரராஜன், பா. லலிதா மற்றும் டி.சாவித்ரி ஆகியோர் தலைமை வகித்த னர். மாநில செயற்குழு உறுப் பினர் என்.பாண்டி துவக்க வுரையாற்றினார். மாநிலக்  குழு உறுப்பினர் வி.அமிர்த லிங்கம் வாழ்த்திப் பேசினார். 

புதிய மாவட்டக்குழு

மாநாட்டில் 33 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக ஆர்.ரகுராமன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் களாக ஜி.பழனிசாமி, பி.பி.பழனிசாமி, ஆர்.கோமதி, கே.ஆர்.விஜயராகவன், எஸ்.சுப்ரமணியன், சி.முருகேசன், சி.துரைசாமி, கே.மாரப்பன், எஸ்.வி.மாரிமுத்து மற்றும் பி.சுந்தரராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்

இம்மாநாட்டில், பெருந்துறை சிப்காட்டினால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசுபாட்டை சீரமைக்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தில் இணைப்புக் கட்டணம் மற்றும் மாதாந்திர கட்டணம் செலுத்துவதை தமிழ்நாடு அரசு தன் பொறுப்பிலேயே செலுத்தும் நிலையைக் கொண்டு வர வேண்டும். அதற்காக கிராம ஊராட்சி களுக்கு சிறப்பு நிதியை வழங்க வேண்டும். சத்திய மங்கலம் வட்டம், கடம்பூர், அந்தியூர் வட்டம் பர்கூர் மலையில் வசிக்கும் மலை வாழ் மக்களுக்கு மலை யாளி (எஸ்டி) சாதிச்சான்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, செம்படை பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.