புதுச்சேரி,டிச.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநி லச் செயலாளராக எஸ்.ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில 24 ஆவது மாநாடு நவம்பர் 30 வில்லியனூரில் துவங்கி நடைபெற்றது.
அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் துவக்கி வைத்து உரையாற்றினார்.
தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயி னார் வாழ்த்துரை வழங்கி னர். வேலை அறிக்கையை மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் சமர்ப் பித்தார். வரவு- செலவு அறிக்கை மாநில செயற் குழு உறுப்பினர் ராமச் சந்திரன் தாக்கல் செய்தார்.
புதிய மாநிலக்குழு
இம்மாநாட்டில் 30 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநிலச் செயலாளராக எஸ். ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார். ஆர்.ராஜா ங்கம், சுதா சுந்தர்ராமன், வெ.பெருமாள், தமிழ்ச்செல் வன், சீனுவாசன், கொளஞ்சியப்பன், பிரபு ராஜ், கலியமூர்த்தி, சத்தியா ஆகியோர் மாநில செயற் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
புதுச்சேரியில் பெஞ்சால் புயலால் வரலாறு காணாத அளவிற்கு பெய்த மழை யால் வெள்ள நீர் குடி யிருப்புகளுக்கு புகுந்து வடியாமல் உள்ளது. வெள்ள நீரை வெளியேற்றவும் தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்கவும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணங்களை ஒன்றிய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மின் துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். சமூக பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி, வாலிபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.