சிவகங்கை,டிச.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளராக ஏ.ஆர். மோகன் தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட மாநாடு நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய இரு தினங்கள் சிவகங்கையில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ. சேதுராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சண் முகப்பிரியா, தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய் வாழ்த்திப் பேசினார். மாநி லக்குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார்.
புதிய மாவட்டக்குழு
மாநாட்டில் 31 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வுசெய்யப்பட்டது. கட்சியின் மாவட்டச் செய லாளராக ஏ.ஆர். மோகன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்களாக வி.கருப்புசாமி, கே.வீரபாண்டி, எஸ். முத்துராமலிங்க பூபதி, சேதுராமன், ஏ.ஆறுமுகம், மணியம்மா, ஏ.சுரேஷ், பி.அய்யம்பாண்டி ஆகி யோர் தேர்வு செய்யப் பட்டனர்.
தீர்மானங்கள்
சிவகங்கை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் உள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். சிவகங்கை அருகே ஆயி ரம் ஏக்கர் பரப்பளவில் கிராபைட் கனிமம் கிடைக் கிறது. இதனைப் பயன் படுத்தி 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் திட்டத்தை அரசு செயல் படுத்துவோம் என்று அளித்த உறுதிமொழியை நிறை வேற்ற வேண்டும். காரைக் குடியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிவகங்கை வழியாக மதுரை -தொண்டி ரயில் பாதையை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.