பெங்களூரு கர்நாடகா மாநிலம் கொப் பல் மாவட்டத்தின் மரு கும்பி கிராமத்தில் கடந்த 2014 ஆகஸ்ட் 28 அன்று மாலை திரைப்பட நுழைவுச் சீட்டு தொடர் பாக சாதி வெறியர்கள் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். தொட ர்ந்து அன்றைய தினம் இரவு குடி யிருப்புப் பகுதியில் புகுந்து அவர் கள் மீது ஆதிக்கச் சாதி வெறியர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அவர் களின் வீடுகளை தீ வைத்து கொளுத்தினர். இந்த தாக்குத லில் பல வீடுகள் எரிந்து நாசமாகின. காயமடைந்த 30 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலை கண்டித்தும், தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நீதி கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி, டிஎஸ்எம்எம் (தலித் சோசன் முக்தி மன்ச்) அகில இந்திய தலை வரும் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னருமான ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமையில் சிபிஎம் ஊழி யர்கள், தலித் அமைப்புகள், பாதிக் கப்பட்ட மருகும்பி கிராம மக்கள் என பல்வேறு இடங்களிலும் போரா ட்டமும், பெங்களூரு நகரில் பிரம் மாண்ட பேரணியும் நடத்தப்பட்டது. சிபிஎம் தொடர் போராட்டம் கார ணமாகவே அப்போதைய கர்நாடக அரசு மருகும்பி வழக்கை தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டது.
சிபிஎம் போராட்டம் வெற்றி
தொடர்ந்து கொப்பல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற மரு கும்பி வழக்கிலும் நீதிக்காக 10 ஆண்டுகளாக சிபிஎம் முன் னின்று போராடியது. கட்சியின் தொடர் போராட்டத்தின் விளை வாக அக்டோபர் 21, 2024 அன்று மருகும்பி வழக்கில் குற்றம்சாட்டப் பட்ட 98 பேருக்கு ஆயுள் தண் டனை வழங்கியது கொப்பல் மாவட்ட நீதிமன்றம். இந்த தீர்ப்புக்கு மரு கும்பி தலித் மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
வெற்றி விழாவாக அமைந்த சிபிஎம் மாநாடு
இந்நிலையில், சிபிஎம் கொப் பல் மாவட்ட மாநாடு மருகும்பி கிரா மத்தில் நடத்த முடிவு எடுக்கப் பட்டது. அதன்படி நவம்பர் 30 அன்று மாநாடு துவங்கியது. மருகும்பி கிராம மக்களுக்காக போராட்டம் நடத்திய சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, மாநாட்டில் கலந்து கொண்டு உரை யாற்றினார். இந்த மாநாட்டில் மரு கும்பி தலித் மக்கள் சிறப்பு ஏற்பாடு களைச் செய்து, திரளாக பங்கேற்ற னர். சிபிஎம் மாநாடு காரணமாக மருகும்பி கிராமம் விழாக்கோலம் பூண்டது. மாநிலச் செயலாளர் யு. பசவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று உரை யாற்றினர்.