மகாராஷ்டிராவின் துணை முதல்வராக அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் இன்று பதவியேற்றார்.
மகாராஷ்டிராவின் துணை முதல்வராக இருந்த அஜீத் பவார் கடந்த ஜனவரி 28ஆம் தேதி புனே மாவட்டம் பாரமதி அருகே நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். இதை அடுத்து, அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு சுனேத்ரா பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்றார்
மும்பையில் உள்ள லோக் பவனில் மகாராஷ்டிரா ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
