tamilnadu

img

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு!

கடந்த நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் முடிவுகள்  வெளியிடப்பட்டுள்ளன.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) தகுதிப் பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வின் முதல் தாள், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், இரண்டாம் தாள், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்தது. இத்தேர்வினை 4,25,000 பேர் எழுதினர். சமீபத்தில் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் விகிதம் குறைக்கப்பட்டன. 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தேர்ச்சி பெறக்கூடிய மதிப்பெண் குறைக்கப்பட்டது. தற்போது, ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் சான்றிதழை trb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.