tamilnadu

img

நந்தன் கால்வாய் திட்ட நில எடுப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு!

நந்தன் கால்வாய் திட்ட நில எடுப்பு பணிகளுக்கு ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றை செய்யாற்றின் வழியாக பாலாற்றுடன் இணைத்து நந்தன் கால்வாய்க்கு பாசன வசதி அளித்தும், புதிய கால்வாய் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 22 ஏரிகள் பயனடையவும் மற்றும் ஏற்கனவே உள்ள நந்தன் கால்வாய் மேம்படுத்துவதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகளுக்கும் ஆக மொத்தம் 58 ஏரிகளுக்கும் நீர் வழங்கும் திட்டத்திற்கு நில எடுப்பு பணிகள் மேற்கொள்வதற்கு நிர்வாக அனுமதி மற்றும் அதற்கான செலவினத் தொகை ரூ.42.69 கோடிக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் செஞ்சி, விக்கிரவாண்டி, விழுப்புரம், திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த உழவர்களின் பல ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளது.