நாளை வள்ளுவர் கோட்டத்தில் சிபிஐ நூற்றாண்டு நிறைவு விழா! முதல்வர் பங்கேற்கிறார்
சென்னை, ஜன. 30 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நூறாவது ஆண்டு நிறைவு விழா சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் பிப்ரவரி 1 (ஞாயிறு) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமை தாங்குகிறார். தேசிய செயற்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ண பாண்டா, ஆனி ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ. பழனிச்சாமி கட்சியின் கொடியை ஏற்றி வைக்கிறார். கட்சியின் வரலாற்று நிகழ்வுகள் புகைப்பட கண்காட்சியை மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் இரா. முத்தரசன் திறந்து வைக்கிறார். மாநில துணைச் செயலாளர் நா. பெரியசாமி வரவேற்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினர் கே. சுப்பராயன் துவக்க உரையாற்றுகிறார். மாநிலத் துணைச் செயலாளர் எம். ரவி நன்றியுரையாற்றுகிறார். இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் கலந்துகொள்கின்றனர்.
2027-இல் ககன்யான் திட்டம்
சென்னை, ஜன. 30 - சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் நாராயணன், “விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் 2027-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது; ஒவ்வொரு அமைப்பையும் தகுதிப்படுத்த வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் சட்டக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி! முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
சென்னை, ஜன. 30 - முதலமைச்சர் முதல்வர் மு.க. ஸ்டாலின், சனிக்கிழமை (ஜன. 31) அன்று, காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேரூராட்சியில் ரூ. 61.78 கோடியில் கட்டப்பட்ட செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி கட்டடத்தையும், கழனிவாசல் பகுதியில் ரூ. 100.45 கோடியில் கட்டப்பட்ட சட்டக்கல்லூரி கட்டடத்தையும் திறந்துவைக்கிறார். இதைத்தொடர்ந்து நடைபெறும் விழாவில் ரூ. 13.36 கோடியில் 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 2,559.50 கோடியில் 49 முடிவடைந்த திட்டப்பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். விழாவில் 15,453 பயனாளிகளுக்கு ரூ. 205.06 கோடியிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து, காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ரூ. 32 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை முதல்வர் திறந்து வைக்கிறார்.
‘முதல்வர்’ திறமைத் தேடல் தேர்வு
சென்னை, ஜன. 30 - தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, ‘முதல்வர் திறமைத் தேடல் தேர்வு’ ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் விகிதம் பிளஸ் 2 வகுப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி நிகழாண்டுக்கான தேர்வு சனிக்கிழமை (ஜன. 31) அன்று நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை முதல் தாள் (கணிதம்), பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இரண்டாம் தாள் (அறிவியல், சமூக அறிவியல்) என இரு தாள்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது.
கூட்டணிக்குத் தலைமை; அதிமுக-தானாம்! சென்னை: பாஜக தலைமையில் என்டிஏ கூட்டணி என்பது தவறு. தமிழகத்தில் என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரி வித்திருக்கிறார். இதன் மூலம் கூட்டணி கட்சிக்குள் மீண்டும் யார் தலைமை என்ப தில் போட்டி ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளித் தூதுவர் திட்டம் தொடங்கியது சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளித் தூதுவர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பள்ளித் தூது வர்கள் பதவியேற்பு உறுதி மொழியில் கையொப்ப மிட்டனர். முன்னாள் மாண வர் வழிகாட்டுதல் திட்டத்தை யும் விழுதுகள் செயலியை யும் அமைச்சர் வெளி யிட்டார். இந்நிகழ்வில் இஸ்ரோ தலைவர் வி.நாரா யணன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஜனநாயகன் படத்துக்கு மேலும் சிக்கல் சென்னை: ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தர வை சென்னை உயர்நீதி மன்ற டிவிசன் அமர்வு ரத்து செய்தது. வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டு ள்ளது. இந்நிலையில் தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. பட நிறுவனம் மேல்முறையீடு செய் தால் தங்கள் வாதத்தையும் கேட்க வேண்டும் என தணிக்கை வாரியம் தெரி வித்துள்ளது. திமுக அரசை பாராட்டிய பாஜக கவுன்சிலர்! சென்னை: சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் திமுக அரசைப் பாராட்டி பேசினார். தனது 80 சதவிகித கோரிக்கைகளை மேயரும் துணை மேயரும் நிறைவேற்றியதாகவும், நல்ல எண்ணத்தோடு பணிகளை முடித்துக் கொடுத்த திமுக அரசுக்கு நன்றி தெரிவித்தார். இதை யடுத்து திமுக கவுன்சிலர் கள் அவரை வேடிக்கையாக கிண்டல் செய்தனர்.