tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

மனிதநேய வார விழா

நாகர்கோவில், ஜன. 30- கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நாகர்கோவில் ஹோம் சர்ச் உயர்நிலைப்பள்ளியில்  மனித நேய  வார நிறைவு விழா நடைபெற்றது. இதில்  மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கலந்து கொண்டு மாணவ மாணவவியர்களிடையே பேசுகையில்,  மாணவ மாணவிகளான நீங்கள் மாணவப் பரு வத்திலேயே மனிதநேயத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டும். மனித நேயத்துடன் ஒழுக்கத்தை கடைபிடிப்ப தோடு கல்வியிலும், கலை இலக்கியத்திலும் சாதனை படைத்திட வேண்டும். மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு உயர்கல்வி பயில பல்வேறு திட்டங்கள் வகுத்துள் ளது. அதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஏற்றத்தாழ்வில்லாத சமூக நீதியை கடைப்பிடிக்கும் மாநிலாமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் பயிலுகின்ற சக மாணவ மாணவியர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட அனை வருடனும் எந்தவொரு சாதி, சமய, பாகுபாடு இன்றி ஒற்று மையாக பழகுவதோடு,  நாம் அனைவரும் தீண்டாமை  என்ற தீய சக்தியை கடைபிடிக்காமல் மனிதநேயத்தோடு ஒருவருக்கொருவர் உதவி செய்து சமுதாயத்தை முன்னேற்ற பாதையில்  கொண்டு செல்ல வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

 மறு நில அளவைப்பணி  ஆட்சியர்  வேண்டுகோள்

நாகர்கோவில், ஜன. 30- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வளாக,  மறுநில அளவை அலுவலகத்திலிருந்து பிப் 2ம் தேதி முதல் 4 வரை அஞ்சுகிராமம் கிராமத்தில் , மறுநில அளவைபணி  நடைபெற உள்ளது. நில அளவர்கள் தங்கள் பகுதிக்கு அளவைப்பணி மேற்கொள்ள வரும் போது,  நில உடமையாளர்களாகிய தங்கள் நிலம் தொடர்பான கீழ்கண்ட கோரிக்கைகளை தெரிவித்து, மறுநில அளவையில் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். தங்களுடைய கிரய ஆவணத்தின்படி பட்டா மாறுதல் செய்தல், கூட்டுப் பட்டாவிலிருந்து உட்பிரிவு செய்து தனிப்பட்டா மாற்றம் செய்தல், பட்டாவில் பெயர் சேர்த்தல், பரப்பு பிழை கள், தங்களது எல்லை அளவுகள் மேலும்,  தங்களது கிராமத்தில், அளவைப்பணி மேற்கொள்ள வரும் நில அளவர்களுக்கு  தேவையான ஆவணங்கள் வழங்கி யும், எந்த ஒரு இடையூறும் ஏற்படா வண்ணம், மறுநில அளவை  பணி  சுணக்கமில்லாமல் முழுமை பெற ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

பிப்.1 முதல் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்  

     திருநெல்வேலி, ஜன 30- தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 1-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.  இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் நடக்கிறது. கோழிக்கழிச்சல் நோய் என்பது கோழிகளை தாக்கும் ஒருவித மான வைரஸ் நோய். இந்நோய் கண்ட கோழிக ளில் இறப்பு நேரிடலாம். இந்த நோய்க்கு சிகிச்சை இல்லை. தடுப்பூசி போடுவதன் மூலம் தான் இந்த நோயை தடுக்க இயலும். இந்த தடுப்பூசி அனைத்து கால்நடை  மருந்தகங்கள் மற்றும் கால் நடை கிளை நிலையங்களில் வாரந்தோறும் இடப்படுகிறது.வருடம் ஒருமுறை சிறப்பு முகாமாக இருவார கோழிக்க ழிச்சல் தடுப்பூசி முகாம் அனைத்து கிராமங்களில் நடத்தப்படுகிறது.  பொதுமக்கள் இந்த முகாமினை  பயன்படுத்தி தங்கள் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி இட்டு கோழிக் கழிச்சல் நோயிலிருந்து  காப்பாற்றி பொருளாதார முன்னேற்றம்அடையுமாறு கேட்டு கொள்ளப்படு கிறார்கள். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.