சென்னையில் கொடிக்கம்பங்கங்கள் நடுவதற்கு இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசியல், மதம் அல்லது சங்கம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக தற்காலிகமாக கொடிக்கம்பங்களை நிறுவ விரும்புவோர், இணையதளத்தின் மூலம் முன்பதிவு (ஆன்லைன் பதிவு) செய்வது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
விண்ணப்பம் சமர்ப்பித்த பின்னர், நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்கள், இட விவரங்கள் மற்றும் கால அவகாசம் உள்ளிட்ட தகவல்களையும் கட்டாயமாக அளிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அனுமதி பெறாமல் பொதுவிடங்களில் கொடிக்கம்பங்களை நிறுவினால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து சீர்கேடு மற்றும் நகரின் ஒழுங்கமைப்பை கருத்தில் கொண்டு இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
