states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிவசேனா (உத்தவ்) எம்.பி., சஞ்சய் ராவத்

அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணமடைந்த நிலையில், அடுத்த நாளே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை, துணை முதலமைச்சர் மற்றும் அவரது வாரிசு குறித்து பேசுவது மனிதத்தன்மையற்ற செயல் ஆகும்.

தேசியவாத காங்கிரஸ் (சரத்) மூத்த தலைவர் அனில் தேஷ்முக்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இணைய வேண்டும் என்று அஜித் பவார் விரும்பினார். ஒட்டுமொத்த பவார் குடும்பமும் அமர்ந்து ஒரு முடிவை எடுக்கும் வரை, அடுத்தகட்ட முன்னேற்றம் எதுவும் இருக்காது. ஆனால் இந்த விவகாரம் துணை முதலமைச்சர் பற்றியோ அதிகாரம் கைப்பற்றுதல் பற்றிய பிரச்சனையோ இல்லை.

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்

நாட்டில் சட்டம் என்று ஒன்று இருக்கிறது.  எந்தவொரு கட்சியோ, தனிநபரோ அல்லது  தங்களது தனிப்பட்ட அல்லது அரசியல் லாபத்திற்காக சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் உரிமை கிடையாது. ஆனால் பாஜகவினர் எல்லா வற்றையும் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் பின்விளைவு மோசமாக இருக்கும்.

அப்னி ஜனதா கட்சி தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா

முன்னேறிய சமூகத்தினர் தங்களுடன் தான் இருக்கிறார்கள் என்று கருதிக்கொண்டு, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகத்தினரை திருப்திப்படுத்துவதற்காக யுஜிசி மூலமாக பாஜக ஒரு நாடகத்தை திரையிட்டுள்ளது. பாஜகவின்  இந்த நடவடிக்கை ஒரு மிகப்பெரிய துரோகமாகும். எஸ்சி, எஸ்டி சமூகத்தினரை தவறாக வழிநடத்தவும், ஏமாற்றவும் பாஜக முயற்சி செய்துள்ளது.