போபால்:
தோ்தல்களில் போட்டியிட விரும்புவோர், பசுமாடுகள் பராமரிப்பில் ஈடுபடுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹா்தீப் சிங் டங் விசித்திரமான கோரிக் கையை எழுப்பியுள்ளார்.
இதுதொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ஹர்தீப் சிங் டங், பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஒருவர் தேர்தலில் போட்டியிட, அவர் மாடு வளர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று கூறியுள்ளஹர்தீப் சிங், இது தனது தனிப்பட்டகருத்து என்றும், “தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகள் சமூகத்தின் ஒருபகுதி என்பதால் அவர்கள் பசுக்களின்பாதுகாப்புக்காக உழைக்க வேண் டும்” என்றும் தெரிவித்துள்ளார்.“பசு வளர்ப்பைப் பின்பற்றாத வேட்பாளரின் வேட்புமனுவை ரத்துசெய்ய வேண்டும்” எனவும், “இதுதொடர்பாக தேர்தல் ஆணையத் திற்கு கடிதம் எழுத இருக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ள ஹர்தீப் சிங் டங், “சமூகத்தின் அனைத்துபிரிவினரும் பசுக்களின் பாதுகாப் பிற்கு பங்களிக்க வேண்டும். தற்போது முன்மொழியப்பட்ட வேளாண்சட்டத்தின் கீழ் விவசாயம் அல்லது விவசாய பொருட்களை வாங்கும் மற்றும் விற்பனை செய்யும் மக்களுக்கு மாடு வளர்ப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.மேலும், “அரசு ஊழியர்களுக்கு மாடு வளர்ப்பு நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால், மாதம் 25,000ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும்ஊழியர்களிடமிருந்து, பசுக்களுக் கான அவர்களின் மாதாந்திர பங்களிப்பாக 500 ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும்” என்று குண்டைத் தூக்கிப்போட்டுள்ளார்.