மோடிக்கு மற்ற நாடுகள் வழங்கும் மரியாதை அனைத்தும் இந்தியாவுக்கானது”
பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்ப யணங்கள் மேற்கொள்ளும் போது, அவருக்கு உலக நாடுகள் விருது வழங்குவது வழக்கம். தற்போதைய டிரினிடாட்-டொபாகோ குடியரசு நாட்டு க்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு மற்ற நாடுகள் வழங்கும் மரியாதை அனைத்தும் இந்தியாவுக்கானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவ ரும், தலைமை செய்தி தொடர்பாளரு மான பவன் கேரா கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,”நமது பிரத மர்கள் எந்தெந்த நாடுகளுக்கு சென்றனர் எந்த நாடுகளுக்குச் செல்லவில்லை என்ற பட்டியலை பிரதமர் மோடி உருவாக்கினார்.கடந்த 50 ஆண்டுகளில் வேறு எந்த பிரதமரும் செல்லாத நாட்டு க்கு பிரதமர் மோடி பயணம் செய்துள் ளார். அதே போல கடந்த 70-75 ஆண்டுகளில் அனைத்து உலகநாடுகளு டனும் நல்ல உறவை மேம்படுத்தி வரு கிறது. இதன் காரணமாகவும், நமது பிரத மருக்கு இன்று கவுரவங்களைப் பெற்று வருகிறார். அவர் பெறும் அனைத்து கவுரவங்களும் இந்தியாவுக்கானது தான்” அவர் தெரிவித்தார்.