states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மூத்த தலைவர் ஹன்னன் முல்லா

மேற்கு வங்க பாஜக தலைவர், பாஜக முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி அல்ல எனக் கூறுகிறார். பாஜகவின் சிறுபான்மை எதிர்ப்பு கொள்கைகள் உலகறிந்தவை. இப்போது மாற்று வார்த்தைகள் சொல்வது மக்களை ஏமாற்றும் முயற்சி மட்டுமே. பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள், என்ஆர்சி, சிஏஏ போன்ற தீய சட்டங்கள் உள்ளன. இதை மறைக்க முடியாது.

​​​​​​பாரத் ஆதிவாசி கட்சி எம்.பி., ராஜ்குமார் ரோட்

2024இல் பன்ஸ்வாரா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இது அனைவருக்கும் தெரியும். அதனால் காங்கிரஸ் தற்போது அதிகாரத்தை மட்டுமே நோக்கி நடந்தால், மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள். தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக போராடினால் மட்டுமே காங்கிரஸ் கட்சி பிழைக்கும்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா

நேஷனல் ஹெரால்டு வழக்கு மிகவும் வினோதமானது. ஏனெனில் ஒரு சொத்து கூட பரிமாறப்படாத நிலையில், பணமோசடி குற்றச்சாட்டு எப்படி வந்தது? அமலாக்கத்துறை மற்றும் ஒன்றிய அரசு காங்கிரஸ் கட்சியை  தாக்குவதற்காக இந்த வழக்கை பயன்படுத்துகின்றன.

சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா

சுதந்திரப் போராட்ட காலம் முதல் பீகார் மக்கள் எப்போதும் அரசியலாக விழிப்புடன் இருந்துள்ளனர். இப்போது அவர்களின் வாக்குரிமை கேள்விக்குறியாக உள்ளது. பீகார் மக்கள் தங்கள் வாக்குரிமை பறிக்கப்படுவதை சகித்துக்கொள்ள மாட்டார்கள்