போபால்:
மத்தியப்பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தின் ஹார்டி கிராம மலைப்பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது பெண். கணவனை இழந்த இவர்,முறையே 16 மற்றும் 18 வயதாகும் தனது இரண்டு மகன்களுடன் குடிசை ஒன்றில் வசித்து வந்தார். தனது குடிசையிலேயே ஒரு சிறிய கடையையும் நடத்திவரும் அவருக்கு சகோதரி ஒருவர் உதவியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு, கடைக்குவந்த 4 பேர், அந்த பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்பதுபோல குடிசைக்குள் புகுந்து, அப்பெண்ணை மிகக் கொடூரமான முறையில் கும்பலாகவல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். அத்துடன், அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியையும் செருகி, மனிதத்தன்மையற்ற வகையில் சித்ரவதை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.சம்பவத்தின்போது அந்த பெண்ணின் இரு மகன்களும் அங்கில்லாத நிலையில், உடனிருந்த சகோதரியாலும் அந்த 4 பேரைத் தடுக்கமுடியவில்லை. பாதிக்கப் பட்ட பெண் தற்போது ரேவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அண்மையில் பாஜக ஆளும் உ.பி. மாநிலம் பதான்மாவட்டத்திற்கு உட்பட்ட மேவ்லி கிராமத்தில், 42 வயதுப் பெண் கோயிலுக்கு உள் ளேயே அர்ச்சகர் உள்ளிட்ட 3 பேரால் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்கு முன் பாகவே, பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மத்தியப் பிரதேசத்திலும் இந்த கொடுமையான நிகழ்வு அரங்கேறியுள்ளது.