கொச்சி:
கேரளத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை சவாலாக ஏற்றுக் கொண்டு அவற்றை வெற்றிகரமாக மாற்றியவர்கள் முதல்வர் பினராயி விஜயனும் சுகாதார அமைச்சர் கே.கே. சைலஜாவும் என்று கத்தோலிக்க சபை மேஜர் ஆர்ச் பிஷப் கர்தினால் மார் ஜார்ஜ் ஆலெஞ்சேரி பாராட்டினார்.‘அமைச்சர் சைலஜா சுகாதாரத் துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரம். உலகம் கவனம் செலுத்தும் நட்சத்திரம். ஆரோக்கியம் என்பது வளர்ச்சியின் ஒரு முக்கிய பகுதி. அமைச்சர் சைலஜா இந்த பகுதியில் நெருக்கடி மேலாண்மை கொள்கைகளை செயல்படுத்தினார். கோவிட் காலத்தில், ஒரு நோயாளி கூட சிகிச்சை இல்லாமல் இறக்கவில்லை. அடுத்த முறை கேரளாவை ஆள்வது எல்டிஎப்போ யுடிஎப்போ எதுவாகவும் இருக்கலாம். ஆனால், சைலஜா டீச்சர் சுகாதார அமைச்சராக இருப்பார்’என்று கர்தினால் கூறினார்.