states

img

கொச்சி-மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் திறப்பு... கேரளத்தின் வளர்ச்சி பாதையில் மற்றுமொரு மைல்கல்....

திருவனந்தபுரம்:
கொச்சி-மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கேரள வளர்ச்சிப் பாதையில் இது ஒரு புதிய மைல்கல்லாகும்.

கொச்சி எல்என்ஜி முனையத்திலிருந்து மங்களூரு செல்லும் குழாய் திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்கள் வழியாக செல்கிறது. இந்த குழாய்ஒரு நாளைக்கு 12 மில்லியன் மெட்ரிக் நிலையான கன மீட்டர் வாயுவைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது. இந்த எரிவாயுகுழாய் திறப்பு நிகழ்வு காணொலிமூலம் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று (ஜன.5) திறந்து வைத்தார். ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக ஆளுநர் வாஜ்பாய் வாலா, கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யுடிஎப் ஆட்சியின்போது கைவிடப்பட்ட ஒரு திட்டத்திற்கு எல்டிஎப் அரசு உயிர் கொடுத்தது. இழப்பீட்டை இரட்டிப்பாக்கி, நிலம் கையகப்படுத்துவதை விரைவுபடுத்திய எல்டிஎப் அரசுஇந்த திட்டத்தை நிறைவேற்றி யுள்ளது. உள்நாட்டு பயன்பாட்டி ற்கான சுற்றுச்சூழல் நட்புடன் செலவு குறைந்த இயற்கை எரிவாயு, போக்குவரத்து துறைக்கு சிஎன்ஜி ஆகியவற்றை இந்த குழாய் வழங்கும். குழாய் கடந்து செல்லும் மாவட்டங்களில் தொழில்துறை மற்றும் வணிக நோக்கங்களுக்காக இயற்கை எரிவாயு வழங்கப்படும். ரூ.5751 கோடி செலவாகும் இத்திட்டம் முழுமையாக செயல்படும்போது ரூ .500 முதல் ரூ.720 கோடி வரைவரி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய குழாய் முனையத்தி லிருந்து திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்கள் வழியாக இந்த குழாய் கர்நாடகாவின் மங்களூரை அடையும். பெங்களூருக்கான பைப்லைன் உட்பட கேரளத்தில் 510 கி.மீ. தூரத்தை இந்த குழாய் கடந்துசெல்கிறது. முந்தைய யுடிஎப் ஆட்சியில் வெறும் 40 கி.மீ. மட்டுமே குழாய் பதித்த நிலையில் திட்டம் கைவிடப்பட்டது.  இந்த திட்டத்திற்கான ஒற்றை சாளர அனுமதி முந்தைய எல்டிஎப் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.முதல் கட்டம் 2010 இல் தொடங்கி ஆகஸ்ட் 25, 2013 அன்று திறக்கப்பட்டது. இரண்டாம் கட்டம் 2012 ஜனவரியில் தொடங்கியது. நிலம் கையகப்படுத்துவதில்  தடை காரணமாக 2013 நவம்பரில் பணிகள் நிறுத்தப்பட்டன. எல்டிஎப் ஆட்சிக்கு வந்தபோது, நில இழப்பீடு இரட்டிப்பாக்கி, நிலம் கையகப்படுத்தப்பட்டது. கெயில் ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொச்சி முதல் மங்களூரு வரை ஏழு பிரிவுகளில் கட்டுமானத்தை மீண்டும் தொடங்கி யது. இந்த எரிவாயு குழாய் 2019 ஜூன் மாதம் திருச்சூர் வரையும் 2020 ஆகஸ்ட்டில் கண்ணூர் வரையும் சென்றடைந்தது.

வாகனங்கள், தொழில்களுக்கு நன்மை
வாகனங்களுக்கு சிஎன்ஜி கிடைப்பதால், எரிபொருள் செலவுகள் 20 சதவிகிதம் குறையும். வாடகை கார் ஓட்டுநர்களுக்குரூ .5 ஆயிரம் வரையிலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ .3,000  வரையிலும் மாதந்தோறும் செலவுகுறையும். ஒரு நாளைக்கு 5,000 கிலோ எல்பிஜி உட்கொள்ளும் தொழில்களுக்கு ரூ .85,000 லாபம் கிடைக்கும்.