திருச்சூர் அரசியலமைப்பு சாசனத்தை அழிக்க எந்தக் கொலைக் கொம்பனுக்கும் இட மளிக்க மாட்டோம் என்ற உறுதியை எடுக்க வேண்டும் என கேரள முதல் வர் பினராயி விஜயன் பேசினார். எஸ்.ஒய்.எஸ்.கேரள இளைஞர் மாநாட்டின் ஒரு பகுதியாக அம் பல்லூரில் நடந்த குடியுரிமை கள் மாநாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் மேலும் கூறுகையில்,”நாட்டில் குடிமக்களின் உரிமைகளுக்கு அர சியலமைப்பு சாசனமே அடிப்படை யாகும். கெடுவாய்ப்பாக அரசியல மைப்பைக் கூட அவமதிக்கத் தயங் காதவர்கள் நாட்டில் அதிகாரத்தில் உள்ளனர். மாநிலங்களவையில் அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மீதான விவாதத்தில் டாக்டர். அம்பேத்கருக்கு எதிரான கருத்து உள்துறை அமைச்சரிடம் இருந்து வந்தது. அவர்களின் நோக்கம் அரசியலமைப்பைத் தகர்த்து, நவீன ஜனநாயக விழுமியங்களை அகற்றி, சமய அடிப்படையிலான ஆட்சி முறையைச் செயல்படுத்து வதாகும். ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்த வுடன் வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. மதரஸாக்க ளும் இப்போது குறிவைக்கப்படு கின்றன. வக்பு சொத்துக்களை கைப்பற்றி சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் சதியின் ஒரு பகுதியாக இந்த திருத்தம் உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்க ளில் மத மாற்ற தடை மசோதாவை அமல்படுத்துவதன் மூலம் கிறிஸ்தவ சிறுபான்மையினரும் குறிவைக்கப்படுகிறார்கள். மதச்சார்பற்ற பாரம்பரியத்தை வலியுறுத்தும் அரசியல் கட்சிகள் இந்த நிலையுடன் சமரசமாக செல்வது பற்றி மிகவும் கவன மாக இருக்க வேண்டும். மதத்தின் போர்வையில் வெறுப்புணர்வை பரப்புபவர்க ளை விமர்சிக்க வேண்டும். இது எந்தப் பிரிவினருக்கும் எதிரானது அல்ல, வகுப்புவாதத்துக்கு எதிரா னது. பெரும்பான்மை வகுப்புவா தத்தை சிறுபான்மை வகுப்புவாதத் தின் மூலம் எதிர்க்க முடிவு எடுப்பது தற்கொலை செய்து கொள் ளும் செயலாகும். மதச்சார்பற்ற ஜனநாயக ஒற்றுமையில் ஒன்று பட்டு போராடுவதுதான் தேவை. வழிபாட்டுத் தலங்கள் மீது புதிய உரிமையை முன்வைத்து நாட்டை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்தும் முயற்சி வேண்டு மென்றே நடக்கிறது. வழிபாட்டுத் தலங்களின் பாது காப்புச் சட்டம்- 1991, வழிபாட்டுத் தலங்களின் மதத் தன்மை ஆகஸ்ட் 15, 1947 இல் இருந்தபடியே பேணப் பட வேண்டும் என்று கூறுகிறது. இந்த நிலையில்தான், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991-ஐ எதிர்த்து தொடரப்பட்ட மனுக்க ளில் கலந்து கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது” என அவர் பேசினார். நிகழ்ச்சிக்கு காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முஸ்லி யார் தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.