கேரள சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக தலச்சேரி எம்.எல்.ஏ ஏ.என்.சம்ஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரள சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த ராஜேஷ், உள்ளாட்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் அவர் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து, சட்டப்பேரவையில் இன்று நடந்த வாக்கெடுப்பில், எல்.டி.எஃப் சார்பாக போட்டியிட்ட சம்ஷீர் 96 ஓட்டுகளும், யு.டி.எஃப் சார்பாக போட்டியிட்ட அன்வர் சாதத் 40 ஓட்டுகளும் பெற்றனர். இதன் அடிப்படையில், புதிய சபாநாயகராக தலச்சேரி எம்.எல்.ஏ ஏ.என்.சம்ஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.