states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி

கேரள மாநிலத்திற்கான நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு மீண்டும் தாமதம் செய்கிறது. இதற்கான காரணம் வெளிப்படையாகத் தெரியவில்லை. குஜராத், உத்தரப்பிரதேசம், கேரளம் என எந்த பகுதி மாணவர்களாக இருந்தாலும் சமமாக நடத்த வேண்டும் ; சமமான முறையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியின் வெள்ள பாதிப்பில் 70 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அவர்களுக்காக இந்தியாவின் பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட ஆறுதல் சொல்லவில்லை. ஆனால் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். டெக்சாஸ் தில்லியிலிருந்து தூரத்தில் இருக்கலாம். ஆனால் மோடியின் மனதில் மண்டியை விட நெருக்கத்தில் இருக்கிறது.

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

சந்திரசூட் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது, வரலாறு நமக்கு கொடுக்கும் இடத்தை பற்றி யோசிக்க வேண்டும் எனப் பேசினார். ஆனால் பணி ஓய்வு பெற்ற பிறகு அரசு ஒதுக்கிய வீட்டிலிருந்து வெளியேற மறுக்கிறார்.

சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா

இந்தியர்கள் அனைவரும் காலனி ஆட்சிக்கு எதிராக போராடியபோது ஆர்எஸ்எஸ் என்ன செய்தது? சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில், ஜனசங்கமாக இருந்தாலும் சரி, பின்னர் பாஜகவாக மாறியதாக இருந்தாலும் சரி, நவீன இந்தியாவை கட்டியெழுப்புவதில் அவர்கள் என்ன செய்தார்கள்?