ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் தலைமையிலான கட்சி பிரதிநிதிகள் ஹேமந்த் சோரனை சந்தித்து நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் சிபிஎம் ஜார்க்கண்ட் மாநிலச் செயலாளர் பிரகாஷ் விப்லவ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பிரபுல் லிண்டா, சமீர் தாஸ், சஞ்சய் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.