தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் பாபு தெலுங்கானா மாநிலம் ஹைத ராபாத்திற்கு அருகே ஜல்பல்லியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், மோகன் பாபு வீட்டில் அவரது இளைய மகன் மஞ்சு மனோஜ் செவ்வாய்க்கிழமை தகராறு செய்தார். மோகன்பாபுவின் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியை சேர்ந்தவர்கள் அவரை வெளியே தள்ளியதில் மோதல் பெரி தானது.
இந்த சம்பவத்தை படம் பிடித்த பத்திரிகையாளர் மீது மோகன் பாபு மைக் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளார் . இந்த தாக்குதலில் காயமடைந்த பத்திரிகையாளர் உடனடியாக ஷம்ஷா பாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரி சோதனையில் கன்னத்தின் எலும்பில் 3 இடங்களில் முறிவு ஏற்பட்டு இருப்பதா கவும், பத்திரிகையாளருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி அவசியம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பத்திரிகையாளர் தாக் கப்பட்ட விவகாரத்தில் நடிகர் மோகன் பாபுவுக்கு தெலுங்கானா பத்திரிகை கவுன் சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.