உத்திரபிரதேச மாநிலம், பதேபூரில் உள்ள 180 வருடங்கள் பழமையான நூரி ஜமா மசூதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது எனக்கூறி உத்திரப்பிரதேச பொதுப்பணித்துறை புல்டோசர் வைத்து தகர்த்துள்ளது.
மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், பதேபூர் மாநகராட்சி நிர்வாகம் மசூதியை இடித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து புல்டோசர் அரசியலை செய்து வருகிறது. சட்டத்தை மதிக்காமல் இஸ்லாமியர்களின் வீடுகளை இடிப்பது, இந்து கோவில்களை இடித்து தான் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது என்று பதற்றத்தை உண்டாக்குவது என்று தொடர்ச்சியாக யோகி ஆதித்யநாத்தின் அரசு சிறுபான்மையின மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது 180 ஆண்டுகள் பழமையான மசூதியை இடித்து பாஜக தங்களின் வகுப்புவாத அரசியலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.