tamilnadu

img

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பதக்கம் கண்டெடுப்பு!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும்  3ஆம் கட்ட அகழாய்வில் நீல நிற கண்ணாடி மணி மற்றும் சுடுமண்ணால் ஆன பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 18-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் தங்க நாணயம், செப்புக்காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட  காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு,  பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் உள்ளிட்ட 2,800க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று நீல நிற கண்ணாடி மணி மற்றும் சுடுமண்ணால் ஆன பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை அணிகலன்களாக முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.