இந்திய ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸின் பதவி காலம் டிசம்பர் 10-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், புதிய ஆளுநராக ஒன்றிய வருவாய் துறை செயலாளராக இருந்த சஞ்சய் மல்ஹோத்ராவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. இந்த நிலையில்,இந்திய ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்றுக் கொண்டார்.
சஞ்சய் மல்ஹோத்ரா ஒன்றிய அரசின் எரிசக்தி, நிதி, வரித்துறை, தகவல் தொடர்பு மற்றும் சுரங்கத்துறை என பல துறைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.