மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தாக்கல் செய்துள்ளனர்.
துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர் பாகுபாடு காட்டுவதால், அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில், காங்கிரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ, ஆர்.ஜே.டி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் கையெழுத்திட்டுள்ளதாக செய்துகள் வெளியாகி வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் நசீர் உசேன் ஆகியோர் மாநிலங்களவை பொதுச்செயலாளர் பிசி மோடியிடம் நோட்டீசை சமர்ப்பித்தனர்.