திருவண்ணாமலை,டிசம்பர்.11- மகா தீபத்திற்கு திருவண்ணாமலை மலை மீது சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக டிசம்பர் 13ஆம் தேதி அன்று மகா தீபத்திற்கு மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தீபத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து செல்லும் ஆட்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும் என்றும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முறையான அறிக்கை வெளியிடுவார் என்றும் அமைச்சர் தகவல்.