tamilnadu

img

மோசமான வானிலை – சென்னையில் 13 விமானங்கள் ரத்து!

மோசமான வானிலை காரணமாக, சென்னையில் 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இதன் காரணமாக மாலை 4 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை(டிச.11) ஒரே நாளில் புறப்பட இருந்த 7 விமானங்களும், சென்னைக்கு வரவிருந்த 6 விமானங்கள் என மொத்தம் 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.