tamilnadu

img

கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது அறிவிப்பு!

2024-ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மகாதேவாவுக்கு வழங்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 
வைக்கத்தில் நாளை நடைபெறும் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவக திறப்பு விழாவில், தேவநூர மகாதேவா-வுக்கு ரூ.5 லட்சம் காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.
எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான தேவநூர மகாதேவா, மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் ஒன்றிய உயரிய விருதான பத்மஶ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருது விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.