“சிறப்பு பொது பாதுகாப்பு மசோதாவை” உடனடியாக திரும்பப் பெறுக!
“சிறப்பு பொது பாதுகாப்பு மசோதாவை” உடனடியாக திரும்பப் பெறுக!
சிபிஎம் மகாராஷ்டிர மாநிலக்குழு வலியுறுத்தல்
ஜனநாயக ஆதரவு மற்றும் அரசாங் கத்திற்கு எதிரான குரலை ஒடுக்கும் “சிறப்பு பொது பாதுகாப்பு மசோதாவை” உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகாராஷ்டிர மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் மகாராஷ்டிர மாநிலச் செயலாளர் அஜித் நவாலே வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பாஜகவின் தேவேந்திர பட்னா விஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி யின் மகாராஷ்டிர மாநில அரசு சிறப்பு பொது பாதுகாப்பு மசோதாவை (ஜன் சுரக்சா மசோதா) அம்மாநில சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி யுள்ளது. இந்த மசோதா மாநில அரசின் எந்த வொரு கொள்கை மற்றும் முடிவுகளுக்கு எதிரான கருத்து மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்புக ளை மிருகத்தனமாக அடக்குவதை நோக்கமாகக் கொண்டது. முதலமைச்சர் பட்னாவிஸ் (உள்துறைத் யையும் கவனிக்கிறார்) இந்த சிறப்பு பொது பாது காப்பு மசோதாவின் உள்நோக்கம் “நகர்ப்புற நக்சல்களை” கட்டுப்படுத்துவதாகக் கூறியுள் ளார். ஆனால் இந்த மசோதாவின் உண்மையான நோக்கம் என்னவென்றால் ஒழுங்கமைக்கப்பட்ட ஜனநாயக ஆதரவுகளின் குரல் மற்றும் செயல் களை ஒடுக்குவதாகும். இந்த மசோதா நிறை வேற்றப்பட்டால் குறைந்தபட்ச நிலை காவல் அதி காரிகளுக்கு கூட கடுமையான அதிகாரங்களை வழங்கும்.
கார்ப்பரேட் - வகுப்புவாத கூட்டணி
பாஜக தலைமையிலான மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் மக்கள் எதிர் கொள்கைக ளால் மகாராஷ்டிர மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இது மக்களிடையே ஆழ்ந்த கவலை மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசா யத் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி போராட்டம் நடத்த தெருக்களில் இறங்கி வருகின்றனர். அதே போல கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தொடர்பான பிரச்சனைகளால் பல்வேறு சமூக குழுக்களும் கிளர்ச்சியில் உள்ளன. குறிப்பாக உழைக்கும் மக்களின் பல பிரிவினர், விவசாய விளைப் பொருட்களின் விலை, பயிர் காப்பீடு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை, நில உரி மைகள், நிலம் கையகப்படுத்தல் மற்றும் மறுவாழ்வு தொடர்பான பிரச்சனைகள், குறைந்தபட்ச கூலி, விலைவாசி உயர்வு, கல்வி, வேலைவாய்ப்பு, ஆரோக்கியம், சாதி மற்றும் மத அடிப்படையிலான ஒடுக்குமுறை மற்றும் அநீதி போன்ற கடுமையான பிரச்சனைகள் குறித்து அரசியலமைப்பு ரீதியான ஜனநாயக முறைகளில் தங்கள் குரலை உயர்த்துகின்றனர். ஆனால் இந்த பிரச்சனைகளை தீர்க்காமல், மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அடக்குவதிலேயே குறியாக உள்ளன. கார்ப்பரேட் மற்றும் வகுப்புவாத சக்திகளின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் நாடாளு மன்ற எதிர் நோக்கங்களை முன்னெடுப்பதற்காக, அரசுகள் மக்களின் ஜனநாயக உரிமைகளை வெடிக்க வைக்கின்றன. குறிப்பாக சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா மக்களின் நலன்களுக்கு எதிராக இந்த கார்ப்பரேட் - வகுப்புவாத கூட்டணி யை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடுமையான தண்டனை, அபராதம்
தனிநபர்கள் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதே மசோதாவின் நோக்கம் என்பது அரசின் கூற்றாக இருந்தாலும், மசோதாவின் தெளிவின்மை காரணமாக அது வெறும் வெற்றுரையாக உள்ளது. எந்தவொரு செயல் அல்லது அமைப்பை “சட்டவிரோதம்” என்று அறிவிக்கும் முழு உரிமை யையும் மாநில அரசு தனக்கே எடுத்துள்ளது. சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள், அந்த அமைப்புக்கு ஆதரவாக உள்ளவர்கள், அதற்கான நிதி திரட்டுபவர்கள் அல்லது அதன் கூட்டங்களில் கலந்து கொள்பவர்க ளுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க மசோதா முன்மொழிகிறது. அதே போல உறுப்பினர்கள் அல்லாதவர்க ளாக இருந்தாலும், அத்தகைய அமைப்பின் செயல்பாடுகளுக்கு உதவி, ஊக்குவிப்போர் மற்றும் அதன் நிர்வாகத்திற்கு உதவுபவர்கள் யாராக இருந்தாலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவை அனைத்தும் உழைக்கும் வர்க்கங்களின் அமைப்புகள் மற்றும் சிவில் சமூகத்தில் செயல்படும் அமைப்புகளை உடைப் பதை நோக்கமாகக் கொண்டது. இதனால் சிபிஐ(எம்)இன் மகாராஷ்டிர மாநிலக் குழு இந்த ஒடுக்குமுறை சட்ட முன்மொழிவை கடுமையாக கண்டிக்கிறது. மாநில அரசு இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர அரசின் இந்த நவ-பாசிச தாக்குதலையும் சிபிஎம் கடுமையாக கண்டிக்கிறது மற்றும் அதன் வெகுஜன அடித் தளத்தை ஒன்று திரட்டுவதன் மூலமும், பரந்த இடது மற்றும் ஜனநாயக கருத்துக்களைக் கொண்ட அனைத்துப் பிரிவுகளையும் இணைப்ப தன் மூலமும், பல வகையிலும் எதிர்த்துப் போராடு வதை உறுதியாகக் கூறுகிறது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.