states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிஜேடி எம்எல்ஏ அருண் குமார் சாகு

முக்கிய எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளத்தின் பங்கேற்பு இருக்கக் கூடாது ; சட்டமன்றத்தில் எந்தக் கேள்வியும் எழுப்பக்கூடாது என்பதற்காகவே 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஒடிசா பாஜக அரசு இடைநீக்கம் செய்துள்ளது. இது திசை திருப்பும் செயல் ஆகும்

தில்லி எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி

தில்லி பாஜக அரசு ரூ.1 லட்சம் கோடியில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் உள்நோக்கம் கொண்டது. கடந்த 10 வருடங்களில் முதல் முறையாக பட்ஜெட் ஒதுக்கீடு 20% க்கும் கீழே இறங்கியுள்ளது. பட்ஜெட் அறிவிப்பு மூலம் அரசுப் பள்ளிகளை முடக்க விரும்புகிறார்கள். முதலில் தில்லி அரசு பொருளாதார ஆய்வறிக்கையை முன்வைக்க வேண்டும்

திரிணாமுல் எம்.பி., டோலா சென்

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஆனால் மோடி பிரதமரான பிறகு ஜனநாயக உரிமைகள், அடிப் படை உரிமைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இது ஒரு சோகமான மற்றும் வருத்தத்திற்குரிய சம்பவம் ஆகும். இதுபோன்ற அரசியலமைப்பு விரோத நடவடிக் கைக்கு இடம் கொடுக்கக் கூடாது. அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜக 200 தொகுதிகளை கூட வெல்லாது.

தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்.பி., ரோகித் பவார்

பாஜக எம்.பி.,யும், நடிகையுமான கங்கனா ரணாவத் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி இருக்கிறார். அப்போது பாஜக அமைதியாக இருந்தது. ஆனால் நகைச்சுவை நடிகர் குணால் உண்மையை கூறியுள்ளார். உண்மையை கூறியதற்கு மிரட்டுகின்றனர்.