இந்தி பேசும் மாநிலங்கள் மூலம் பெரும்பான்மையைக் கைப்பற்ற பாஜக திட்டம்
அரசியல் விமர்சகர் யோகேந்திர யாதவ் குற்றச்சாட்டு
தொகுதி சீரமைப்பு மூலம் இந்தி பேசும் மாநிலங்கள் மூலம் பெரும்பான்மை யைக் கைப்பற்ற பாஜக திட்டமிட் டுள்ளதாக பிரபல அரசியல் விமர்சகர் யோகேந்திர யாதவ் குற்றம் சாட்டி யுள்ளார். இதுதொ டர்பாக அவர் மேலும் கூறுகையில், ”மக்களவையின் 543 தொகுதிகளில் இந்தி பேசும் மாநிலங்கள் 226 தொகுதி களைப் பெற்றுள்ளன. தொகுதி மறு சீரமைப்பு மேற்கொண் டால் தொகுதிகளின் எண்ணிக்கை 259 ஆக உயரும். இது கிட்டத்தட்ட பெரும் பான்மை எண்ணிக்கை ஆகும். தற்போது 132 தொகுதிகளுடன் இருக்கும் தென் னிந்திய மாநிலங்கள் தொகுதி மறு சீரமைப்பு மூலம் மக்களவை தொகுதிக ளின் எண்ணிக்கை குறைந்து பலவீனமான நிலையை அடையும். தென்னிந்திய மாநி லங்கள் கிழக்கு மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களுடன் இணைந்து முயற்சி செய்தாலும், நாடாளுமன்றத்தில் அரசி யல் சட்டத் திருத்தங்களை எதிர்த்து ஒன் றுமே செய்ய முடியாத நிலை ஏற்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.